பண்பாடு, கலாசாரம் என்றெல்லாம் பேசுகிறோம்! இதைப் படித்தால் அதன் பொருள் விளங்கும்!
"ஒரு சமயம் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
செம்மங்குடி சீனிவாச ஐயர் தலைமை தாங்கினார்.
ஒரு பெரிய மாலையை MSS க்கு அணிவிக்கும்படி செம்மங்குடியிடம் வழங்கப்பட்டது.
அவரும் அதனை பெற்று எம் எஸ் க்கு அணிவிக்கும் முன்பு மைக்கை பிடித்து இப்படிக் கேட்டார்:
'எம் எஸ் ஒரு பெண்மணி, நான் அவருக்கு மாலை போட இந்த சபை அனுமதிக்கிறதா?'
என்று கேட்டார்.
அவையில் இருந்தவர்கள்அனுமதி தந்தனர்!
அடுத்து 'எம் எஸ் சுப்புலட்சுமி கணவர் சதாசிவம் அனுமதி அளிக்கிறாரா?'
என்று கேட்டார். அவரும் அனுமதித்தார்.
அடுத்து 'என்னுடைய துணைவியார் இதனை அனுமதிக் கிறாரா?
என்று கேட்டார். அவரும்
சம்மதம் தெரிவித்தார்.
இறுதியாக 'எம் எஸ சுப்புலட்சுமிஇதற்கு ஒப்பு கொள்கிறாரா?'
என்று கேட்டார்.
அவரும் மகிழ்ச்சியாக தலையை ஆட்டினார்.
மீண்டும் மைக்கை பிடித்த செம்மங்குடி 'எத்தனை பேர் அனுமதி தந்தாலும் எனக்கு ஏதோ ஒன்று உறுத்துகிறது! அதனால் திரு சதாசிவம் அவர்களே மாலை அணிவிக்கும்படி கேட்டுகொள்கிறேன்!
என்று கூறி மாலையை
சதாசிவத்திடம் ஒப்படைத்தார்.
சதாசிவமும் மாலையை பெற்று எம் எஸ் க்கு அணிவித்தார்.
அவையின் கரகோஷம் விண்ணை பிளந்தது.
செம்மங்குடியை தடுத்த அந்த ஏதோ ஒன்றுதான் என்ன ?
அதன் பெயர்தான்
பண்பாடு ...
கலாச்சாரம் ...
பாரம்பரியம் ...
இது இன்றளவும் இந்தியாவில்
ஒட்டிக்கொண்டு இருக்கிற
காரணத்தால் தான் உலகமே
இந்தியாவை பார்த்து வியந்து கொண்டிருக்கிறது.
!
ஒரு பண்பாடு இல்லை யென்றால் பாரதம் இல்லை!
நம் பண்போடு வாழ்ந்திருந்தால்
பாவமும் இல்லை!
நாமும் இவைகளை கடைபிடித்து
வாழ்ந்து பார்க்கலாம்.
Comments
Post a Comment