வள்ளளார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்;
ச - உண்மையே சகரமாய்,
ர - விஷயநீக்கமே ரகரமாய்,
வ - நித்திய திருப்தியே வகரமாய்,
ண - நிர்விஷயமே ணகரமாய்,
ப - பாவ நீக்க ஏதுவே பகரமாய்,
வ - ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து.
சரவணபவ (குருமுகமாய் சரஹணபவ என்ற மந்திரபேதம் உண்டு) என்ற சடாட்சர மந்திர சாதனை செய்யும் சாதகன் உண்மை அறிவைக் கொண்டு, புலன் வழி விஷயங்களை நீக்கி, நித்திய திருப்தியுடன், புலன்களைக் கடந்த ஆன்மாவின் இயற்கையான தெய்வகுணத்தில் கவனம் வைத்து சாதனை செய்ய சித்தத்தில் பதிந்திருக்கும் பாவ சம்ஸ்காரங்கள் நீக்கம் பெற்று எல்லாத்தத்துவங்களும் தாண்டி, உண்மணிக்குக்கு அப்பால் மனமற்ற நிலையில் இருக்கும் சாந்தமான ஆன்ம அறிவினைப் பெறுவான் என்பது பெறப்படும்!
Comments
Post a Comment