அனுமனைத் தரிசிக்கும் அலங்காரங்களும் பயன்களும்


அனுமனை வணங்காத இந்து பக்தர்களே இல்லையெனலாம். அந்தளவுக்கு அனுமனை வணங்கும் பக்தர்கள் உலகத்திலே உண்டு. ஸ்ரீராமபிரானின் பக்தனாய் விளங்கி அந்த ஸ்ரீராமனுக்கும் சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன் பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர். அதே போல் பக்தர்களிடையேயும் நினைத்த காரியத்தை மாருதியாகிய அனுமன் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை நீடித்துள்ளது. நாம் நினைக்கும் காரியம் வெற்றியாவதற்கு அதற்குத் தகுந்த அலங்காரத்தில் அனுமனைக் கண்டால் நாம் தேடிய வெற்றி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு அலங்காரங்களையும் தரிசித்து அதற்குரிய பலன்களைப் பெறுவீர்களாக!


முத்தங்கி சேவை அலங்காரம்!!!


தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம் :

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின்

அஸாத்யம் கீம் தவ பிரபோ

ராம தூத மஹாப்ராக்ஞ்ய

மம கார்யம் ஸாதயா


தரிசிப்பதின் பலன் : 

ராஜயோகம் கிடைக்கும்


பட்டு அலங்காரம் :-

தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:


ஓம் புத்திர்பலம் யசோ தைர்யம்

நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக் படுத்வம் ச

ஹநூமத் ஸ்மரணாத் பவேத்


தரிசிப்பதின் பலன்: 

துன்பங்கள் விலகும்


சந்தனக்காப்பு அலங்காரம்!!!

தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

ஆஞ்சநேயம் அதிபாட லானனம்

காஞ்சநாத்ரீ கமநீய விக்ரஹம்

பாரிஜாத தருமூல வாஸிநம்

பாவயாமி பவமாந நந்தனம்

தரிசிப்பதின் பலன்: செல்வ வளர்ச்சி உண்டாகும்


வெண்ணைகாப்பு அலங்காரம்

தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

தத்ர தத்ர கிருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்ப வாரிம் பரிபூரண லோசனம்

மாருதிம் நம: ராக்ஷ ஸாந்தகம்


வெண்ணைய் காப்பு சாற்றுவதின் பலன்


ஸ்ரீ ஆஞ்சநேயருடைய உடம்பு உக்ரமானது. அவரது உடம்பில் வெப்பம் அதிகமாக உள்ளதால், அவருக்கு வெண்ணெய் காப்பு இடுவதால், அவரின் உடல், மனம் குளிர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கின்றார்.


தரிசிப்பதின் பலன்:

வெற்றி கிடைத்திடும்


சாதாரணத் தோற்றம்

தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி

அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்(டு) அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்

தரிசிப்பதின் பலன் :

தடைகள் விலகிடும்


வடைமாலை அலங்காரம்

தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி

வெஞ்சினக் கதிர்பின் சென்று பிழுமறை யுணர்ந்தாய் போற்றி

மஞ்சன மேனிராமன் மலர்ப்பாதம் மறவாய் போற்றி

எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி


அனுமானுக்கு வடைமாலை சாற்றுவதன் வகைகள்

பேருருவம் கொண்ட ஆஞ்சநேயருக்கு வடைமாலை மூன்று வகையாக சாற்றப்படுகிறது. கூப்பிய கைக்கு மட்டும் வடைமாலை சாற்றுவது ஒருவகை. இடுப்பு வரை இரண்டு மடங்கின முழங்கைகள் வரை வடைமாலை சாற்றுவது இரண்டாவது வகை. தலையிலிருந்து பாதம் வரை வடைமாலை சாற்றுவது மூன்றாவது வகை. அவரவர் சக்திக்குத் தகுந்தாற்போல் வேண்டிக்கொண்டு வடைமாலை சாற்றவேண்டும்.


வடைமாலை சாற்றுவதின் பலன்

“மாம்ஸார்த்தே மாஷம் குர்யாத்’’ என்னும் வரிகளுக்கு ஏற்ப ‘மாஷம்’ என்னும் பெயரினைக் கொண்ட உளுந்து தான்யத்திற்கு உள்ள சிறந்த குணம் யாதெனில், மாம்ஸத்திற்கு உள்ள பலமும் –  குணத்தினையும், உளுந்தும் கொடுக்க வல்லது. ஸ்ரீ ஹனுமான் இலங்கைக்குச் சென்று திரும்பி வருவதற்குத் தேவையான வீர்யத்தையும், திறனையும் பெறுவதற்காக உளுந்து தான்யத்தினை உண்டார் என்பது சான்றோர் வாக்கு. எனவே, சிறப்பான இந்த உளுந்து தான்யத்தினால் செய்யப்பட்ட வடைகளைக் கொண்டு மாலையாக ஹனுமனுக்கு ஸமர்ப்பிப்பதால் அவர் மகிழ்ந்து தன் பக்தர்களுக்கு உள்ள கஷ்டம், ரோகம், பிணி ஆகியவற்றினை அகற்றி நாம் சிரமமின்றி, ஆரோக்கியமாக வாழ வழிசெய்து அருளுவார்.

தரிசிப்பதின் பலன் : 

சனி, ராகு கிரக தோஷங்கள் விலகும்


மஞ்சள் பட்டு அலங்காரம்

தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்

செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்

வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்

அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

தரிசிப்பதின் பலன்:

சுக்கிர கிரக தோஷங்கள் விலகும்.


திருமஞ்சன அலங்காரம்

தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து

இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன

உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று

மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி

தரிசிப்பதின் பலன்:

ஆயுள் விருத்தி உண்டாகும்.


வெற்றிலைக்காப்பு அலங்காரம்

தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன்

வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன்

அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்காலை

கல்வினைப் பெண்ணாய்ச் செய்தாள் கழலிணைப் போற்றுவோமே

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடுவதின் பலன்

சீதாதேவி அசோகவனத்தினில் சிறைபட்டிருந்த ஸமயம் ஸ்ரீ ஆஞ்சநேயர் அங்கு சென்று சீதையை வணங்கி, தான் ராமதூதன் என்பதை நிரூபித்து சூடாமணியினைப் பெற்றுக் கொண்டு ராமனிடம் திரும்ப எண்ணி சீதா தேவியிடம் ஆசீர்வாதங்களை வேண்டி நின்றான். அச்சமயம் சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து, வெற்றிலைகளைக் கிள்ளி ஆசீர்வாதங்களை அருளினாள். ஆதலால் ஹனுமாருக்கு வெற்றிலை மாலை அணிவித்தால் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதையின் ஆசீர்வாதங்களால் நாம் பிரார்த்திப்பவைகள் எல்லாம் லக்ஷ்மிகரமாக நிறைவேறும் என்பது திண்ணம்.

தரிசிப்பதின் பலன் :

சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.


பூ அலங்காரம்

தரிசிக்கும்போது சொல்லவேண்டிய மந்திரம்:

சுட்டின னின்றனன் றெழுத கையினன்

விட்டுயர் தோளினன் விசும்பின் மேக்குயர்

எட்டரு நெடுமுக டெய்தி நீளுமேல்

முட்டுமென் றுருவொடும் வளைந்த மூர்த்தியான்

தரிசிப்பதின் பலன் :

ஆரோக்கியம் பெருகும்.


துளசி மாலை போடுவதின் பலன்

இராமாவதாரத்தின் முடிவினில் “சீதாதேவி பூமியினில் சென்றுவிட்டால் மறுபடியும் என்னை எவ்வாறு அடைவாய்” என்று ஸ்ரீராமன் சீதையிடம் கேட்டான். அதற்கு சீதாதேவி, “நான் மறுபடியும் (திருத்துழாய்) துளசியாக வந்து உன் திருவடியை அடைவேன்” என்று கூறியதாக புராணங்கள் கூறுகிறது. எனவே, துளிசி இருக்குமிடத்தில் ஸ்ரீ ராமர் இருக்கின்றார். ஸ்ரீராமன் இருக்குமிடத்தில் ஹனுமான் இருக்கின்றார் என்ற ஐதீகத்தினைக் கொண்டு, துளசியை மாலையாக ஸ்ரீ ராமனின் பிரசாதமாக ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், ஹனுமான் மிக்க மகிழ்வுற்று வேண்டுவோருக்கு வேண்டியவற்றைத் தந்து அருள்வார்.


இளநீர்

இளநீர் உடம்பின் வெப்பத்தை அகற்றி சக்தியைத் தரும் வல்லமையுடையது. ஹனுமான் ‘என்றும் சிரஞ்சீவி ஆதலால், அவருக்கு இளநீர் அபிஷேகமோ அல்லது நிவேதனமோ செய்வதால், பக்தர்களை அனுக்ரஹித்து எவ்வித கஷ்டமும் இன்றி அதிக நாட்கள் இப்பூவுலகில் வாழ வரமளிப்பார்.


பாலபிஷேகம்

அனுமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் எடுத்த காரியங்கள் நிறைவேறும். நல்ல செய்திகள் கிடைக்கும்

பாலபிஷேகத்தை காணும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஆப்யாய சுஸமேதுஸ விஸ்வத சோமவிருஷ்ணியம்

பாவவான் வாச சங்கதே

குளிர்ச்சியான தயிரை அனுமனுக்கு அபிஷேகம் செய்தால் அனுமன் மனம் குளிர்ந்து நமக்கு அருள் புரிவார். தயிரை அபிஷேகம் செய்தால் மக்கட்பேறு உண்டாகும்.


அனுமானுக்கு நல்லெண்ணை காப்பு சாற்றுவதன் மூலம் குளிர்ச்சி தரும். அவரும் மனம் குளிர்ந்து அருள்வார் என்பது நம்பிக்கை.


எலுமிச்சம்பழ மாலை சாற்றுவதன் பலன்

எலுமிச்சம் பழம் ராஜகனி. புள்ளியில்லாத எலுமிச்சம்பழமே சிறந்தது. எலுமிச்சம் பழத்தை அனுமானுக்கு மாலை சாற்றினால் திருஷ்டியினால் உண்டாகும் கோளாறுகள் விலகும். ஏவல், பில்லி, சூனியம் விலகும்.

Comments

Popular posts from this blog