*நீங்க எப்படி?*


*அழுத்தமா?*

*ஆனந்தமா?*

*Pressure?* 

*Pleasure?*


நாம் நம் தொழிலை

எப்படி செய்கிறோம்? என்பதே

நம் வெற்றியை, வாழ்க்கையை

தீர்மானிக்கும்.


இலக்கு உங்களுக்கு

அழுத்தமா? ஆனந்தமா?


குறிக்கோள் உங்களுக்கு

அழுத்தமா? ஆனந்தமா?


உழைப்பு உங்களுக்கு

அழுத்தமா? ஆனந்தமா?


இப்படி பல விஷயங்கள்

உங்கள் வாழ்க்கை பயணத்தை

தீர்மானிக்கும்....


ஆனந்தமாக செய்பவர்கள்

சுலபமாக இருந்தததாக

எண்ணுவார்கள்...

அழுத்தத்தோடு செய்பவர்கள்

அதே வேலையை கஷ்டப்பட்டு

செய்ததை போல உணர்வார்கள்.


எல்லாம் நம் மனநிலையை

சார்ந்தே இருக்கிறது.


ஆடிப்பாடி வேலை செய்தால்

அலுப்பு இருக்காது... என்ற

பாடல் கூறுவதும் இதைத்தான்.


பறவைகள் பறப்பதை ஒரு

சுமையாக கருதாமல்

ஆனந்தமாக பறப்பதால்

பார்க்க அழகாக இருக்கும்.


சிறுத்தை ஓடும்.. ஆனந்தமாக

என்ன பிழைப்பு என்று ஒருநாளும்

வருத்தப் படாது....


அழுத்தமாக நினைத்து செய்தால்,

உடலும், மனமும் சீக்கிரம்

சோர்வடையும்...


ஆற்றில் நாமாக விழுந்து

குளிக்கும்போது எவ்வளவு

ஆனந்தம்? நம்மை யாராவது

தள்ளி விட்டால் எவ்வளவு

வேதனை? இதுதான் வித்தியாசம்.


நம் தலையெழுத்து என்று எண்ணி

தொழில் செய்யாமல்,

நாம் தலையெடுத்து முன்னேற

அருமையான வாய்ப்பு என்று

எண்ணி உழைத்தால் ஏற்றம் நிச்சயம்.


எந்த இலக்கும் எளிதுதான்

Pleasure என்றால்..


அவருக்காக, இவருக்காக,

அவர் என்ன நினைப்பார்,

இவர் என்ன நினைப்பார்

என்று பிறருக்காக உழைத்தால்

Pressure தான்..


காதலை pleasure என்று எண்ணும்

காதலர்கள், கல்யாணத்தை pressure

ஆக நினைப்பதால், பல கஷ்டங்களை

சந்திக்கிறார்கள்...


இப்ப முடிவு எடுங்கள்.

ஆனந்தமாக வேலை செய்வேன்

என்று... எதையும் அழுத்தமாக

எண்ண மாட்டேன் என்று....


விட்டுப் பிடியுங்கள்..

விட்டுக் கொடுங்கள்.

அழுத்தம் வரவே வராது.


ஐயோ என்று சொல்லாமல்

ஆஹா என்று சொல்லுங்கள்.


வெற்றி நிச்சயம்

Comments

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips