#ஆரூர்_தொழுது_உய்யலாம்

பகுதி - 3


41, திருவாரூர் திருக்கோயிலில்தான் தருமபுர ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்த ஸ்வாமிகள் கமலை ஞானப் பிரகாசரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்க மூர்த்தி பூஜையினை ஏற்றுக் கொண்டார்கள்.


42, இக்கோயிலில் கமலை ஞானப் பிரகாசருக்குத் தஞ்சை மன்னனும் கிருஷ்ண தேவராயனும் வீதி விடங்கப் பெருமானுக்கும் வன்மீக நாதப் பெருமானுக்கும் ஆராதனைக்காக அளித்த தேவ தானங்கள் இராஜாங்கக் கட்டளை என்ற பெயரோடு விளங்கி வருகின்றன. இது இப்பொழுதும் தருமை ஆதீன நிர்வாகத்திலேயே நடைபெற்று வருகிறது.


43, திருவாரூரில் பூங்கோயில் அமைந்துள்ள முதல் சுற்றில் மூலாதார கணபதி வேறு எங்கும் இல்லாத விதத்தில் காட்சி தருகிறார். ஐந்து தலை பாம்பு சுருண்டு படுத்துக் கிடக்க அதன் நடுவில் தாமரையின் மேல் பாசம் அங்குசம் மோதகம் தந்தத்துடன் நர்த்தன கணபதி காட்சி தருகிறார்.


44, திருவாரூர் திருக்கோயிலில் வீதி விடங்க விநாயகர், ஐங்கலக்காசு விநாயகர், வாதாபி கணபதி, கமலாலயக் குளக்கரையில் மாற்றுரைத்த பிள்ளையார், ஆசை விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், பொற்கம்ப விநாயகர் முதலியன சிற்பச் சிறப்பாலும் தெய்வீக பக்திச் சிறப்பாலும் சிறப்புற்றவைகள்.


45, திருவாரூர் பூங்கோயிலின் உள்ளே பல்வேறு சிறப்பு சந்நிதிகள் உள்ளன. ஓட்டு தியாகர் கோயிலில்தான், சுந்தர மூர்த்திகளைக் கோயிலுள் போகாதவாறு விறண்மிண்டர் தடுக்க இறைவன் இங்கு வந்து ஆட்கொண்டான்.


46, ஆருர் அறநெறி தனிக்கோயில் அப்பரடிகள் பாடல் பெற்றது. நமி நந்தி அடிகள் வழிபட்ட்து. கண்டராதித்த சோழ தேவரது மனைவியாகிய செம்பியன் மாதேவி திருப்பணி செய்தது. இக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மேற்கு முகமாக உள்ளது.


·       *  பரவையுண்மண்டளி – இது தெற்கு கோபுரத்திற்கு அருகில் உள்ளது. பரவை நாச்சியார் வழிபட்டது. சுந்தரர் பாடப் பெற்றது. கிழக்குப் பார்த்த தனிக்கோயில்.


·         *ஆடலேசுவரம் – நாகபிலம் உள்ளது. அப்புத்தலம் ஆனந்தேஸ்வரம்.


·         *விசுகர்மேசம் – சிற்பக்கலை நுட்பம் செறிந்த கற்கோயில். அருணேசலம்.


·         *சித்தீஸ்வரம் – மேற்கு நோக்கிய சந்நிதி கமலாலயக் குளத்தின் நடுவில் யோகாம்பாள் சமேத நகநாத ஸ்வாமி கோயில் உள்ளது.


·        * அடியார் கோயில்களாக விறண்மிண்டர் கோயில், திரு நீல கண்டர் கோயில், பரவை நாச்சியார் கோயில் போன்றவைகளும் உள்ளன.


·         *திருவாரூர் கோயிலில் இரண்டு சண்டேசர் சந்நிதிகள் உள்ளன. எம சண்டர், எமனே சண்டீசராக அமர்ந்துள்ளார், ஆதி சண்டேஸ்வரர்.


·         ஏராளமான சந்நிதிகள் உள்ளதால் குவித்த கரம் விரிப்பதற்கு வழியே இல்லை என்பதனை மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை “குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்” என்று புகழ்கிறார்.


·       *  திருவாரூரில் மட்டுமே நடத்தப் பெறும் முசுகுந்த சஹஸ்ரநாம அர்ச்சனை மிகவும் விஷேடமானது.


·         *மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புடைய திருவாரூர் சென்று தொழுது வழிபடுவோமாக.


திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog