இன்றைய சிந்தனை.

🔏🔏🔏🔏🔏🔏🔏🔏🔏🔏🔏


ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூன்று வகையான தீர்வுகள் உள்ளன....

ஏற்றுக் கொள்வது....

மாற்றிக் கொள்வது....

விட்டு விடுவது....!!!!


ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.... 

மாற்றவே முடியாத விஷயங்களை விட்டுத் தள்ளுங்கள்....!!!!!


புதிய உறவோ, பழைய உறவோ....

உங்கள் மீது யார் அன்பாக இருக்கிறார்களோ....

அவர்களை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் கூடாது..,

விட்டுப் போகவும் கூடாது....!!!!!


எல்லோருடைய கனவுகளும் ஒன்றாய் இருப்பதில்லை.....

ஒரு வேளை உணவு என்பதே சிலருக்கு கனவாய் இருக்கிறது....!!!!!


மனிதன் துன்பப்படாமல் தன்னையே மறு உருவாக்கம் செய்து கொள்ள முடியாது...!!!


ஏனென்றால், அவன் துன்பப்படுவதற்கு முன்...

வெறும் கல்லாகவும்..,.

துயரங்களுக்குப் பின் .....

மீண்டும் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்வதில் ....

சிற்பியாகவும் இருக்கிறான்....!!!!


அனைத்துக் கேள்விகளுக்கும் காலம் பதில் சொல்லத்தான் செய்கிறது......

நாம் தான் கவனிக்கத் தவறி விடுகிறோம்....!!!!


தூய காற்று அதிகரிக்க அதிகரிக்க தீய காற்று குறையும்..,

நற்குணங்கள் அதிகரிக்க அதிகரிக்க ....

தீய குணங்கள் மறையும்..,!!!!


அழகானவர்களை பிடிக்கிறது என்பதை விட.....

பிடித்தவர்கள் தான் அழகாய்த் தெரிகிறார்கள் என்பதே உண்மை....!!!!


தயங்கி நிற்காதே....

தன்னடக்கம் கூட தவறாகத் தெரியும்...

சிலரின் கண்களுக்கு.....!!!!!


இனிய நற்காலை வணக்கம் 🙏.

வாழ்க வளமுடன்.

எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்.

🔏🔏🔏🔏🔏🔏🔏🔏🔏🔏🔏

Comments

Post a Comment

Popular posts from this blog