கணபதி ஹோமம் செய்வதால் வரும் நன்மைகள்.


மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது.


 வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம்.

 

அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 


1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். 


ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும்.

 

திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும்.

 

நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். 


தேன் தங்கம் தரும். 


நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். 


மோதகம் போரில் வெற்றி தரும்.


 மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். 


தாமரை செல்வ வளர்ச்சி தரும். 


வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும். 


அருகம்புல் குபேர சம்பத்து தரும். 


மோதகம் நினைத்ததைத் தரும். 


வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே. 


தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும். 


இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள் பெருமை சேர்க்க வல்லவை. பலன் தருபவை.

Comments

Popular posts from this blog