#திதியும்_விதியும் மாறிய திருத்தலம்


தன்னை தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததோடு, 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின் விதியை, என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருளி மாற்றம் செய்தவர் அமிர்தகடேஸ்வரர். அதுபோல தம் பக்தனின் வாக்கை மெய்ப்பிப்பதற்காக, அமாவாசை திதியையே பவுர்ணமி திதியாக மாற்றிக் காட்டியவள் இத்தல அபிராமி அன்னை. இப்படி விதியும், திதியும் மாறிய திருத்தலமாக சிறப்பு பெற்று விளங்குகிறது திருக்கடையூர் திருத்தலம்.


இதில் அபிராமி அன்னையின் திருவிளையாடல் சிறப்புக்குரியதாகும். 

அபிராமி அம்மன் “அன்பனே! வாய் தவறி மன்னனிடம் கூறிய நின் சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடி நிறைவு செய்க' என்று கூறியதும், எஞ்சிய 21 பாடல்களையும் சுப்பிரமணியன் பாடினார்.


மன்னன் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமியின் அருளையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். சுப்பிரமணியத்திற்கு ‘அபிராமி பட்டர்’ என்ற பட்டத்தை மன்னன் சூட்டினான். அபிராமிபட்டர் மறுத்தாலும், அவரது சந்ததியினருக்காக நிலபுலன்களும் அளித்தான். அதற்கான உரிமைச் செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறதாம்.


சிவத்திருப்பணிகள் பல செய்து, பின்னாளில் ஒரு ரேவதி நட்சத்திர தினத்தில் அன்னை அபிராமியுடன் ஒன்றினார் அபிராமி பட்டர்.



தை அமாவாசை தினத்தன்று, ஆண்டு தோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னிதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படும்.


அமைவிடம்


திருக்கடையூர் திருத்தலம் சீர்காழியில் இருந்து கருவி (கருவிழுந்த நாதபுரம்), ஆக்கூர் வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து செம்பொனார்கோவில், ஆக்கூர் வழியாகவும் திருக்கடையூர் செல்லலாம்.


அபிராமி அந்தாதி சிறப்பு


வாழ்வின் வலிகளால் முடங்கிக் கிடக்கும் எண்ணற்ற எளிய மக்களுக்கு சக்தி கொடுத்து, அவர்கள் வாழ்வில் வளம், நலன் கொடுக்கும் மந்திர சக்திவாய்ந்த நூலாக திகழ்கிறது ‘அபிராமி அந்தாதி.’ அபிராமி அந்தாதியின் ஒவ்வொருச் சொல்லும் மந்திரச் சொற்களாகவே இருக்கின்றன. ‘அந்தாதி’ என்றால் முதல் பாடலின் இறுதி எழுத்து, அசை, சொல், சீர், அடி ஆகியவற்றுள் ஒன்று அதற்கடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு பாடப்படுவதாகும். அதாவது ஒரு பாடலின் அந்தம் அடுத்தப் பாடலுக்கு ஆதியாக வருவது ‘அந்தாதி’ ஆகும்.


அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரியத்தைச் சித்தி செய்யக்கூடிய மந்திரசக்தி படைத்தவையாக உள்ளன. அபிராமி அந்தாதியின் முதல் பாடல் ‘உதிக்கின்ற’ என்று தொடங்கி, அதன் நூறாவது பாடல் ‘உதிக்கின்றவே’ என்றே முடிகிறது. ஆம்! அனுதினமும் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து அபிராமி அம்மனை நினைத்து வழிபட்டால், வாழ்வில் அல்லல்கள் மறைந்து நல்லவை எல்லாம் உதித்தெழும்...!!!

Comments

Popular posts from this blog