*தெய்வத்திடம் வைக்கும் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேற பரிகாரம்!*


உங்களது வேண்டுதல் நிறைவேற நீங்கள் பிறந்த நட்சத்திரம் உங்களது உடலில் எந்த பாகத்தில் உள்ளது என்பதை அறிந்து அந்த பாகத்தை தொட்டு உணர்ந்து வணங்கும் ஒரு புதுமையான பரிகாரம் பற்றிய பதிவு!


நம் பூமியை 27 நட்சத்திரங்கள் ஆளுகின்றன. 


அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நட்சத்திரத்தை ஒதுக்கி அந்த நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்படுத்துகிறது. 


ஒவ்வொரு மனிதனின் உடம்பிலுள்ள குறிப்பிட்ட பாகத்திலும் 

அந்த நட்சத்திர சக்கரம் மறைந்து செயல்படுகிறது.


அவ்விடத்தை கண்டு உணராத வரை ஒரு பரிகாரமும் பலன் தருவதில்லை.


உடலில் நமது 

ஜென்ம நட்சத்திரம் மறைந்துள்ள இடத்தை நம்மை அறியாமலேயே தொட்டு வணங்கி உணர்வை கொடுத்து இருந்தால் பலன் கிடைக்கும்.


ஏதேச்சையாக தொடுவதைவிட உணர்ந்து தொட்டால்தான் 

பலன் பெருகும்.


எனவே அவரவர் ஜென்ம நட்சத்திரம் உடலில் எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். 


கீழே உள்ள அட்டவணையை பார்த்து அவரவர் ஜென்ம நட்சத்திரம் உடலில் எந்த பாகத்தில் மறைந்து செயல்படுகிறது  என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.


நட்சத்திரம் - உடலில் மறைந்துள்ள பாகம்

-----------------------------

-----------------------------


அசுவினி,பரணி, கிருத்திகை

ஆகிய நட்சத்திரங்கள்

-நெற்றி முழுவதும் உள்ள இடமாகும்


ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்கள்- நெற்றியை தவிர்த்து முகம் முழுவதும் உள்ள இடமாகும்


புனர்பூசம், பூசம் ஆகிய நட்சத்திரங்கள்-- இரு தோள்களாகும்.


ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம் ஆகிய நட்சத்திரங்கள் - மார்பு பகுதியாகும்.


சித்திரை நட்சத்திரம் உள்ள இடம் வயிறு பகுதியாகும்.


சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள்-- புஜங்கள் இரண்டுமாகும்.


அனுசம் - பாலின உறுப்பாகும்.


கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரங்கள்-- இரு கைகளாகும்.


பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள்-- தொடைகள் இரண்டுமாகும்.


திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ,ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இருகால்

பாதங்களாகும்.


மேற்கண்ட நட்சத்திரங்களில் ஒன்று தான் உங்கள் நட்சத்திரமாக இருக்கும்.


எனவே நீங்கள் எந்த தெய்வத்திற்கு எங்கு வழிபாடு செய்தாலும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் உடலில் மறைந்துள்ள பாகம் எதுவோ அதை நினைவு கூர்ந்து அங்கு தொட்டு வணங்கி வேண்டினால் உங்களின் வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும்.


நமசிவாயம் வாழ்க.

சிவமே ஜெயம். சிவமே தவம். 

சிவனே சரணாகதி.

🙏🙏🙏

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் எம் ஈசனே 

🙏🙏

இனிய ஈசன் அருளுடன் இனிய சிவ காலை வணக்கங்கள். 

🙏🙏🙏🙏

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips