🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🔥அக்னீநட்சத்திரமும் காண்டவ தகனமும் 🔥

🌞  அக்னி நட்சத்திரம் குறித்து புராணம்  

                கதை ஒன்று உள்ளது.* 🌞

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


⚡ புராண காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.  யாகத்தீயில் வார்க்கப்பட்ட நெய்யை அதிகமாக உண்ட அக்னி தேவனுக்கு மந்த நோய் தாக்கி விட்டது. அந்த நோய் நீங்குவதற்கு மூலிகை செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை 21 நாட்கள் எரித்த காலமே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது


🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞


*🔥 அதை தெரிந்து கொள்வோம். யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம்.* இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்து வளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


🌿 இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர்.


பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார். அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, "உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். 


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡


⭐ இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று வேண்டினார்.


அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார்.🌞🌞🌞


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐


🍁  "அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே'' என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


"உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். 🍁🍁🍁


அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன.🍂🍂🍂


 இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்'' என்றார்.⭐⭐⭐


🌿🌳🌴🌿🌳🌴🌿🌳🌴🌿🌳🌴🌿🌳🌴


"அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?'' என்றான் அர்ச்சுனன். "நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்'' என்றான்.


🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋


⭐ கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், 


"அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும்.


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


 ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை'' என்றான்.


உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.🌺


🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞


அப்பொழுது கண்ணன், "அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம்.


 அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்'' என்றார்.


அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான்.


 இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க "சரக்கூடு' ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.🌞🌞🌞


🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂


அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். 


அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். 


அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான்.


🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞


 இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.⭐⭐⭐⭐


🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂


     🌺💐   தானம் செய்யுங்கள்  💐🌺

          🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


🍒 இந்த நாட்களில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்வது நல்ல பலனைத் தரும். தான- தர்மங்கள் செய்யலாம். தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கலாம்,நோயாளிகளுக்கு இளநீர் தரலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணி, குடைகளை வழங்கலாம், ஏழை, எளியவர்களுக்கு தயிர் சாதம் அளிக்கலாம்.


      🍁🍁  ஸர்வம் கிருஷ்ணம்  🍁🍁*


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

 ⭐⭐  மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன.* ⭐⭐


 இதில் எந்த நட்சத்திரமுமே அக்னி நட்சத்திரம் இல்லை. ஆனால் அக்னிக்கு நிகரான சூரியனின் நட்சத்திரங்கள், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளது,


 இதில் மேஷ ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கும் காலத்தில் அக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது.


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐


⭐ இந்த அக்னி நட்சத்திர தோஷ காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.


🌺🌺🌺🍁🌺🌺🌺🌺🌺🍁🌺🌺🌺🌺🌺


⭐ சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழையும் போது உச்சமடைகிறார். உச்சமடைந்த சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டு பொசுக்குகிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் தொடங்கி ரோகிணி நட்சத்திரம் 1 பாதம் வரை சூரியன் பயணிக்கும் போது நெருப்புக்கு இணையான வெப்பத்தை சூரியன் கக்குவதால் அக்னி நட்சத்திரம் என்கின்றனர்.

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

நெருப்பு கோள் சூரியன் மேஷ ராசி செவ்வாயின் வீடாகும். நெருப்பு ராசியான மேஷத்தில் நெருப்புக் கோள் செவ்வாயின் ஆட்சி வீடு என்பதால் நெருப்பு கிரகமான சூரியன், மேஷத்தில் சஞ்சாரிக்கும் போது வெயில் உக்கிரமாக தகிக்கிறது.


பரணியின் தொடங்கி ரோகிணி வரை

சூரியன் பயணம் சித்திரை மாதம் மேஷம் ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீனம் ராசியில் முடிகிறது.

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

 அசுவினியில் பயணத்தை தொடங்கும் சூரியன், கார்த்திகை நட்சத்திரம் துவங்குவதற்கு இரண்டு பாதங்கள் முன்பாக அதாவது, பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள் சூரியன் நுழையும் காலம் முதல் கார்த்திகை முடிந்து இரண்டு பாதம்வரை அதாவது ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்வரை சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம் என்கின்றனர்.


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐


அக்னி பகவான்

ரிக் வேதம் அக்னியைக் கொண்டே ஆரம்பிக்கிறது.

 அக்னியை கொண்டே முடிகிறது. 


அக்னியின் முக்கிய குணம் பிரகாசம், ரூபம் ஹிரண்மயம் அக்னியே தேவதைகளுக்கும், ஹோமம் செய்பவர்களுக்கும் பாலமாக இருந்து, நாம் வழங்கும் ஹவிஸை கொண்டு சேர்க்கிறார். இரண்டு முகம் கொண்டவன் அக்னி. யாகத் தீயில் ஆசார்யர், யஜமானர் இருவரும் இடும் ஹவிஸையும் ஏற்பதற்காக இரண்டு முகங்கள்.


 தீ வளர்த்து ஹோமம் செய்பவர் பண்டிதர். அதன் பலனை அனுபவிப்பவர் யஜமானர். அக்னிக்கு இரு மனைவிகள் ஸ்வாஹா, ஸ்வதா. மங்கள காரியங்களுக்கு ஸ்வாஹா என்றும், பித்ரு காரியங்களுக்கு ஸ்வதா என்றும் கூறி மந்திரங்களை உச்சரிப்பார்கள்.


🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳


        🔥  அக்னி நைவேத்தியம் 🔥

அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள். அதனால் ஏழு தினங்களுக்கு அவரை பூஜிப்பர். அதாவது, பூஜையறையில் செங்காவியால் அக்னியின் கோலத்தை வரைந்து வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபமேற்றி வழிபட வேண்டும். பிரசாதமாக முறையே ஞாயிறுக்கிழமை பாயசம், திங்கட்கிழமை பால், செவ்வாய்கிழமை தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் கிழமை தேன் மற்றும் வெண்ணெய், வியாழன் கிழமை சர்க்கரை மற்றும் நெய், வெள்ளிக்கிழமை வெள்ளை சர்க்கரை மற்றும் பானகம், சனிக்கிழமை பசுநெய் மற்றும் தயிர்சாதம் என நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும்.


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


             🔥  தோஷ காலம்  🔥

காண்டவ வனத்தை அக்னி தேவன் கபளீகரம் செய்த காலமே அக்னி நட்சத்திர காலம் என்கிறது புராண கதை. சூரியன் வெப்பம் தகிக்கும் இந்த கால கட்டத்தை கத்திரி வெயில் காலம் என்றும் கூறுகின்றனர். 


இது தோஷகாலமாக கருதப்படுகிறது. எனவேதான் இந்த கால கட்டத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்தனர்.


 இப்போதும் கூட வீடு கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்த்து விடுகின்றனர்.


27 நாட்கள் அக்னி ஆட்டம்

இந்த ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை மொத்தம் 27 நாட்கள் அக்னி நட்சத்திரம் காலமாகும்.


 அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 


21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் தாக்கம் குறையத் தொடங்கும். 


அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு, எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும் 


இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள்..


🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅


🌺 என்ன செய்யலாம் செய்யக்கூடாது🌺


அக்னி நட்சத்திர காலத்தில் நல்ல காரியங்கள் செய்யலாமா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு. திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


 சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். அதே நேரத்தில் முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.


🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


🔥 புராண காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்.  யாகத்தீயில் வார்க்கப்பட்ட நெய்யை அதிகமாக உண்ட அக்னி தேவனுக்கு மந்த நோய் தாக்கி விட்டது. அந்த நோய் நீங்குவதற்கு மூலிகை செடிகள் நிறைந்த காண்டவ வனத்தை 21 நாட்கள் எரித்த காலமே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


      மகாபாரதத்தில் இது குறித்து கிளைக்கதை ஒன்று உள்ளது. காண்டவ வனம் யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ளது. அந்தக் காட்டிற்குள் நிறைய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். அந்த வனம் இந்திரனின் காவலில் இருந்தது. அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்து வளர, அவ்வப்போது மழை பெய்ய வைத்தான் மழையின் அதிபதியான இந்திரன். காண்டவ வனத்தை எரித்து மூலிகைகளை கபளீகரம் செய்தால் தனது நோய் நீங்கி விடும் என்று நம்பினார் அக்னி தேவன் அதற்காக கிருஷ்ணர், அர்ஜூனன் உதவியை நாடினார் அக்னி தேவன்.

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋


அக்னி தேவன் வேண்டுதல் ஒருநாள் யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் குளித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கரையேறும் சமயத்தில் ஓர் அந்தணர் வந்தார். கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து ஒரு வேண்டுகோளை வைத்தார். உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார்.


அக்னி தேவனுக்கு வந்த நோய் கண்ணனுக்கு அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, அவரை உற்றுப் பார்த்தார். “அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன். தனக்கு ஏற்பட்ட மந்த நோயை பற்றி சொன்னார். நெய் சாப்பிட்டு வந்த நோய் “உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் சாப்பிட்டால் மட்டுமே என் மந்த நோய் தீரும்” என்று கூறி வேண்டினார். நீங்கள் காட்டிற்குள் நுழைவதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்று கேட்டார் அர்ச்சுனன்.


🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹


அக்னி தேவனோ, நான் காட்டிற்குள் நுழையும் போதெல்லாம் இந்திர தேவன் மழை பெய்ய வைத்து என்னுடைய முயற்சியை தடுத்து விடுகிறார். எனவே நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அக்னி நட்சத்திர காலம் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று கண்ணனும் அர்ஜுனனும் உதவி செய்ய ஒத்துக்கொண்டனர். அதுவும் எப்படி உங்களுக்கு உதவி செய்ய தனக்கு அம்பும், வில்லும் தேவை என்று வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்ற அக்னிதேவன், சக்தி வாய்ந்த காண்டீப வில், அம்புகளை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டார் அர்ஜூனன். 21 நாட்கள் மட்டுமே இந்த வனத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் அப்போது மழை பெய்யாமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறினார் கண்ணன். வனத்தை எரித்த அக்னிதேவன் அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க சரக்கூடு ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.


🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹


21 நாட்கள் எரித்த அக்னி பகவான் அக்னி தேவனும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான். இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.அக்னி தேவனுக்கு உதவி செய்யப்போன அர்ஜூனனுக்கு சக்தி வாய்ந்த காண்டீப வில் கிடைத்தது. இந்த வில்தான் குருச்சேத்திர போரில் பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது 🔥


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Comments

Popular posts from this blog