இரண்டு சின்ன பசங்க, 

ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க.


ஒரு அமைதியான இடத்துக்கு போய் 

இரண்டுபேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க.


பக்கத்துல உள்ள 

சுடுகாட்டுக்கு போவோம்னு 

ஒருத்தன் சொன்னான். 


சுடுகாட்டின் கேட் பூட்டி இருந்துச்சு....

கேட் மேல ஏறி உள்ள குதிச்சாங்க.


அப்படி குதிக்கும்போது 

ரெண்டு ஆரஞ்சுப்பழம் மட்டும் 

கீழ விழுந்துடுச்சி. 

கூடைல நிறைய பழம் இருந்ததுனால, அதை அவங்க கண்டுக்கல.


கொஞ்சநேரம் கழிச்சி சுடுகாடு வழியா ஒரு குடிகாரன் வந்தான்.


அவன் உள்ள இருந்த சத்தத்த கேட்டு அங்கேயே நின்னுட்டான்.


"உனக்கொன்னு, எனக்கொன்னு"


"உனக்கொன்னு, எனக்கொன்னு"


 ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"


இதை கேட்ட அவனுக்கு  

போதை மொத்தமும் தெளிஞ்சிடுச்சி..


அவன் பயந்து போய் அங்கிருந்து விழுந்தடிச்சி ஓடினான்.


அவன் போற வழியில 

ஒரு மரத்தடியில சாமியார் ஒருத்தர் 

தவம் பண்ணிக்கிட்டு இருந்தார்.  


இவன் உடனே  

அங்க இருந்த சாமியார் கிட்ட விஷயத்தைச் சொன்னான்.


"சாமி! 

தயவு செய்து என் கூட வாங்க. 

கடவுளும், சாத்தானும் சுடுகாட்டுல பிணங்கள பங்கு போடுறத காமிக்கிறேன்."


சாமியார்க்கு ஒன்னும் புரியல. 

ஆனாலும் 

அவன் ரொம்ப கெஞ்சி கூப்பிட்டதால 

அவன் கூட போனாரு.


அவங்க கேட் கிட்ட வந்து 

கேட்ட திறக்கும் முன்...


இப்பொழுதும் சுடுகாட்டுல இருந்து மறுபடியும் அதே சத்தம் வந்துச்சு..


"உனக்கொன்னு, எனக்கொன்னு" ''உனக்கொன்னு, 'எனக்கொன்னு"


திடீர்ன்னு சத்தம் நின்னுடுச்சி. 

ஆனா, ஒரு சத்தம் தெளிவா கேட்டது.


"ஆமா! 

கேட்ல இருக்குற இரண்டு யாருக்கு?"


"எனக்கு."


"இல்ல..இல்ல. எனக்குத்தான்."


"சரி நீயே அதை உரிச்சு தின்னு"


அவ்வளவுதான்..


"நாங்க இன்னும்

சாகல. நாங்க இன்னும் சாகலை"ன்னு அலறிக்கிட்டே, 

சாமியாரும், குடிகாரனும் விழுந்தடிச்சிக்கிட்டு ஓடிட்டாங்க...


கொரானா நினைப்புலேயே

இருக்காதீங்க. .....


*ரிலாக்ஸா கொஞ்சம் சிரிக்கலாமே.....*

Comments

  1. கட் மாயம் சிரித்தே ஆக வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips