எத்தகைய அச்சமும் அகலுவதற்கு ஓத வேண்டிய அபிராமி அந்தாதி பாடல் 62.


அபிராமி அந்தாதியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகிறது. 


ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது.


முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அன்னையை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். 


பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். 


அபிராமி அந்தாதி நூற்பயன் 101 வது பாடல்:  


ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.


அபிராமி அந்தாதி 

101வது பாடல் பொருள்: 

எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, 

மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர். 


எத்தகைய அச்சமும் அகல உதவும் அந்தாதி பாடல் 62ஐ பார்க்கலாம்.


எத்தகைய அச்சமும் அகலஉதவும் அபிராமி 

அந்தாதி பாடல் எண் 62வரிகள் மற்றும் விளக்க உரையுடன் :


*தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத 

வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் 

கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச் 

செங்கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே*


விளக்க உரை:

ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். 


அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! 


பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய் அம்மா.


அபிராமி அந்தாதியின் இந்த 62வது பாடலை அமாவாசை பௌர்ணமி அன்று தவறாமல் துதிக்கவும். 


தேவியின் அருள் கிடைக்கும். 


உங்கள் கோரிக்கைகளை தேவி அபிராமி நிறைவேற்றுவாள். 

அபிராமி அந்தாதியின் இந்த 62வது பாடலை எஸ்.ஜே.ஜனனி அவர்களின் இனிய குரலில் கேட்டு மகிழ காணொளிக்காட்சி

Comments

Popular posts from this blog