ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்று கொண்டிருக்கிறோம்.
நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.
நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.
எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.
தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.
பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.
உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.
சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.
சமாதானம் செய்யுங்கள்.
நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .
மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை.
தெய்வ வழிபாட்டை விட்டு விடாதீர்கள்
*யாரையும் எக்காரணத்திற்கும் இழக்காதீர்கள்*
*இன்னும் அதிகமாக நேசியுங்கள்*
நல்ல பதிவு
ReplyDelete👌
ReplyDeleteArumai
ReplyDeleteArumai
ReplyDelete🙏🤲
ReplyDeleteGood 👍
ReplyDelete