காரணமின்றி காரியமில்லை


டாக்டர் சுரேந்தர் வெளிநாட்டிற்கு சுறுசுறுப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தார். மிகப்பெரிய மருத்துவர்கள் மாநாடு அங்கு நடைபெறுகிறது அதில் அவருக்கு சிறப்பு விருது ஒன்று அளித்து கெளரவப்படுத்த இருக்கிறார்கள் அதற்காகத்தான் இந்த பரபரப்பான விமான பயணம்.


பறந்து கொண்டிருந்த  விமானம் பாதி வழியிலேயே இயந்திரக் கோளாறினால் வேறு ஒரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மகரயாழ்

இதன் காரணமாக தன்னால்  சரியான நேரத்தில் மாநாட்டை அடைய முடியாது என்று டாக்டர்  சுரேந்தர்  எண்ணினார்


 விமான நிலைய கஸ்டமர் கேர் பணிப்பெண்ணிடம் தான் போக வேண்டிய இடத்திற்கு அடுத்த விமானம் எப்பொழுது என்று கேட்டார். அதற்கு அந்தப் பணிப்பெண் அடுத்த விமானம் இன்னும் பத்து மணி  பிறகுதான்  ஆனால் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு வாடகைக்கார் மூலம் செல்ல முடியும் அதற்கு பயணம் நேரம் மூன்று மணி நேரம் ஆகும் என்று கூறினார்.


வேறு வழியில்லை என்பதால் அந்த யோசனைக்கு சம்மதித்து, ஒரு காரை வாடகைக்கு எடுத்து தனது பயணத்தைத் தொடங்கினார். இருப்பினும் அவர் காரில் செல்லும்போது, ​​வானிலை திடீரென மாறியது ஒரு கடுமையான மழையுடன் புயல் தொடங்கியது. ஒரு மணிநேர பயணத்திற்கு பின் சாலை முழுவதும் தண்ணீர் வெள்ளம் கார் அதற்கு மேல் செல்லாது என்று கார் ஓட்டுனர் காரை நிறுத்தி விட்டார்.


 இப்போது இருக்கும் சூழ்நிலையில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தான் மாநாட்டிற்கு தாமதமாக வரும் காரணத்தை தெரியப்படுத்தலாம் என நினைத்து பக்கத்தில் ஏதேனும் தொலைபேசி வசதி இருக்கா என்று பார்த்தார்.


 தெலைவில் ஒரு வீடு இருந்தது. அங்கு ஒரு பெண்மணி இருந்தார் அவரிடம் தன் பிரச்சனையை கூறி ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு செய்துகொள்கிறேன் என்று அனுமதி கேட்டார். அந்தப் பெண்மணி இன்முகத்துடன் ஐயா எங்கள் வீட்டில் புயலால் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது  செயல்படவில்லை என்று கூறி மேலும் தங்களைப் பார்த்தால் மிகவும் களைப்புடன் இருக்கிறீர்கள். ஒரு கப் காப்பி குடித்து விட்டு செல்லுங்கள் என்று அன்புடன் அழைத்தார்.


 டாக்டர்க்கு அந்தப் பெண்மணி காபியை கொடுத்துவிட்டு "பூஜையை பாதியில் விட்டுவிட்டு வந்துவிட்டேன் காபி குடித்துக்கொண்டே இருங்கள் வருகிறேன்" என்று கூறி அருகே படுத்திருந்த ஒரு சிறுவனை அருகில் அமர்ந்து தெய்வப்பாடல்கள் பாடியபடி கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.


 அந்த சிறுவனுக்கு ஏதோ நோய் உள்ளது அதனால் கடவுளிடம் பிரார்த்திக்கிறார் என்று டாக்டர் சுரேந்தர் யூகித்துக் கொண்டார்.  இவர் ஒரு டாக்டர் என்பதால் அந்த சிறுவனுக்கு என்ன விதமான வியாதி என்று தெரிந்துகொள்ள ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த பெண்மணியின்  எதனால் பிரார்த்திக்கிறீர்கள் அந்த பையனுக்கு என்ன நோய் என்று கேட்டார்.   ஐயா இவன் எனக்கு ஒரே மகன் இவனுக்கு மிக அபூர்வமான ஒரு புற்றுநோய் உள்ளது அதற்கு இங்குள்ள மருத்துவர்களால் மருத்துவம் பார்க்க இயலவில்லை என்று கைவிட்டு விட்டார்கள் ஆனால் நோயை சரி செய்ய ஒரு மருத்துவரால் முடியும் என்று கூறி ஒரு வெகு தொலைவில் உள்ள ஒரு மருத்துவரின் பெயரைச் சொன்னார்கள். அங்கு போய் அவரிடம் மருத்துவம் பார்க்கும் அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை வழியும் இல்லை அதனால் இறைவனிடமும் என் மகனை காப்பாற்று என்று பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறேன். இதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை  என்று கண்கள் கலங்க கூறினார்.


 தயங்காமல் சொல்லுங்கள் அம்மா உங்கள் மகனுக்கு என்ன நோய் நீங்கள் பார்க்கவேண்டிய மருத்துவர் யார் சொல்லுங்கள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்று கூறினார். அந்த அம்மாள் கலங்கிய கண்களுடனே  என் மகனுக்கு இரத்தப்புற்று நோய் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் இது சரிசெய்யக்கூடிய மருத்துவர் யாரோ டாக்டர் சுரேந்தர் என்பவராம். ஆனால் அவர் வெகுதொலைவில் உள்ள ஒரு நகரத்தில் இருப்பவராம்.


 டாக்டர் சுரேந்தர் தன் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. விமானம் கோளாறு ஏற்பட்டது, கார் பயணம் பாதியில் நின்றது, நாம் இந்த வீட்டிற்கு வந்தது, இந்த வீட்டின் நம்ம அன்புடன் காபி கொடுத்து நம்மை உபசரித்தது அனைத்தும் காரணமில்லாமல் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.

 அந்த தாயாரிடம் கூறினார் நீங்கள் சொன்ன அந்த டாக்டர் சுரேந்திரன் நான் தான் உங்கள் மகனை சரி செய்து நல்ல முறையில் கொண்டுவர வேண்டியது என் பொறுப்பு *எல்லாம் அவன் செயல்* என்று சொல்லி முடித்தார்.


நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், நம்மை கொண்டு யாரோ ஒருவருக்கு வாழ்வு ஏற்படுத்த கடவுள் செய்த ஏற்பாடாகவும் இருக்கலாம்.


காரணமின்றி காரியமில்லை.

Comments

Post a Comment

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips