*உலக பெற்றோர் தினம்*
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை,
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை......
இந்த பாடல் வரிகளை கேட்கும் போதெல்லாம் நம் மனதில் ஒரு இனம்புரியாத உணர்வு உருவாகிக் கொண்டே இருக்கும்.
பெற்றோர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் உழைப்பினை அங்கீகரிக்கும் வகையில் இன்றைய தினம் ( ஜூன் மாதம் முதல் நாள்) உலக பெற்றோர்கள் தினமாக ஐக்கிய நாட்டு சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நாளில் நமது
பெற்றோரை மகிழ்ச்சியாக வைப்பதற்கு நாம் வேறேதும் செய்யத்தேவையில்லை. நமக்கான நேரத்தில் சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் மனம் விட்டு பேசி, அவர்களுக்குள் தனிமை என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொண்டாலே போதும்.
*“ஏவா மக்கள், மூவா மருந்து!"* என்று கொன்றை வேந்தனில் அவ்வை பிராட்டியார் அவர்கள், பெற்றோரின் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள், அவர்களை நெடுநாள் மகிழ்ச்சியாக வாழவைக்கும் மருந்தாகத் திகழ்வார்கள் என்று கூறியுள்ளார்.
ஆகவே, நமக்காக தங்களது சுகங்களை தியாகம் செய்து, நமது வாழ்க்கை மேம்பாட்டிற்காகவே வாழ்ந்திட்ட
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
இனிய நல் வாழ்த்துக்கள்💐💐
Comments
Post a Comment