தினமும் தோப்புக்கரணம் போடுங்கள் நண்பர்களே !

=============================================

தினமும் 10 தோப்புக்கரணம் போடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?
============================================

தோப்புக்கரணம் போடுவதால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.தினமும் 10 தோப்புக்கரணம் போடுவதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இப்பொழுது காண்போம் நண்பர்களே.

நம் முன்னோர்கள் காலத்து முதலே தோப்புக்கரணம் போடுவது வழக்கமாக இருந்துவந்தது. பொதுவாக பிள்ளையார் கோவிலுக்கு செல்லும்போது நாம் தோப்புக்கரணம் போடுவது வழக்கமான ஒன்று.

தோப்புக்கரணம் செய்வதால்,,

1. நினைவாற்றல் அதிகரிக்கும்
=============================

தொடர்ச்சியாக தினமும் 10 தோப்புக்கரணம் செய்து வந்தால் உங்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தினமும் தோப்புக்கரணம் செய்தால் உங்களுக்கு தேவையற்ற எண்ணங்கள் நீங்கி உங்களை ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் நண்பர்களே.

2. வலிமையான கால்கள்
==============================

நமது உடலை தாங்கி நம்மை இங்கு அங்கு கொண்டு செல்ல முக்கிய பங்கு வகிப்பது கால்கள் ஆகும்.தினமும் தோப்புக்கரணம் செய்தால் உங்களின் கால்களின் வலிமை அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு வலிமையான கால்களை அளிக்கும். எனவே வலிமையான கால்களை பெற தினமும் தோப்புக்கரணம் செய்யவேண்டும்.

3. வலிமையான இடுப்பு
========================

தினமும் தோப்புக்கரணம் செய்து வந்தால் உங்களின் இடுப்பு எலும்பு ஆரோக்கியம் மேம்படும்.உங்களின் இடுப்பு எலும்புகளை இது மேலும் வலுவடைய செய்யும்.எனவே தினமும் 10 தோப்புக்கரணம் செய்துவாருங்கள் நண்பர்களே.

4. ஆரோக்கியமான முதுகெலும்பு
==============================

தினமும் தோப்புக்கரணம் செய்தால் உங்களுக்கு ஆரோக்கியமான முதுகெலும்பு கிடைக்கும். மேலும் இது உங்களுக்கு முதுகு வலி வராமல் காக்கும். "முதுகு வலி உள்ளவர்கள் தினமும் தோப்புக்கரணம் செய்து வந்தால் உங்களுக்கு வலிமையான முதுகெலும்பு கிடைக்கும்.

5.மன அழுத்தம் மற்றும் மன சோர்வு நீங்கும்
==============================

தினமும் தோப்புக்கரணம் போடுவதால் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சோர்வு நீங்கும்.மேலும் இது உங்களின் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் இது உதவுகின்றது.எனவே தினமும் தோப்புக்கரணம் போடுங்கள்  -

Comments

Popular posts from this blog

Thought for the Day - Activity for the Brain