Great read.....hare krishna..... கிருஷ்ணர் த்வாரகை செல்ல ஆயத்தமானபோது குந்தி பாண்டவர்களுடனும் த்ரௌபதியுடனும் வந்து அவரை துதி செய்தால். அது குந்தி ஸ்துதி என்று கூறப்படும் ஒரு பொருள் நிறைந்த துதியாகும்..... அவள் கூறியதாவது , “ நீ ஆதிபுருஷன். ஈஸ்வரன். ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவன். எல்லா ப்ராணிகளுக்கும் உள்ளே அவைகளுக்கே தெரியாமல் நீ உறைந்துள்ளாய். மாயை என்ற திரைக்குள் ஒரு கை தேர்ந்த நடிகனைப்போல் நீ மறைந்துள்ளாய். யோகிகளுக்கும் ஞாநிகளுக்குமே எட்டாத உன்னை எங்ஙநம் என்னைப்போன்ற ஸ்த்ரீகளால் அறிந்து கொள்ள இயலும்? “ பிரபல ஸ்லோகமான ‘கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோ நம: ‘ இங்குதான் சொல்லப்பட்டது. இதற்கு அடுத்த ஸ்லோகமும் மிகவும் அழகு வாய்ந்தது. ‘ நம: பங்கஜனாபாய நம: பங்கஜ மாலினே நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜங்க்ரயே ‘... தாமரையை உந்தியில் உடையோனுக்கு , தாமரை மாலை அணிந்தோனுக்கு, தாமரைக்கண்ணனுக்கு , தாமரைப் பாதம் உடையோனுக்கு நமஸ்காரம் .... குந்தி மேலும் கூறலுற்றாள்.... “எப்போதெல்லாம் எங்களுக்கு ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் நீ வந்து காப்பாற்றுகிறாய். உன் தரிசனம் கிடைக்கும் என்றாகள் எங்களுக்கு ஆபத்து வந்து கொண்டே இருக்கட்டும். “ “ நீ உன்னிடம் பக்தியைத் தவிர வேறு ஒன்றும் இல்லாதவர்க்கு நீ எளியன். செல்வம் , பதவி, பிறவி, கல்வி இவைகளால் பெருமிதம் கொண்டவர்க்கு நீ அரியன். “ குந்தி பிறகு கிருஷ்ணனுடைய பாலலீலைகளை நினைத்து ஆச்சரியத்துடன் கூறுகிறாள். “நீ பிறப்பற்றவன் செயலற்றவன். அப்படி இருக்கையில் உரலில் கட்டுவதற்கு யசோதை கயிற்றைக் கையில் எடுத்தபோது பயத்துடனும் கண்ணில் கண்ணீருடனும் நின்றாயே ! உனக்கேது பயம்? பயம் அல்லவா உன்னைக் கண்டு பயப்படும்? “ ( இதைப் படிக்கும்போது நம்மாழ்வார் இந்த நிகழ்ச்சியை நினைந்து ‘எத்திறம்,’ என்று ஆறு மாதம் நினைவற்று இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது அல்லவா?) “ நீர்ப்பெருக்கை கடலில் சேர்க்கும் கங்கை போல் எனது புத்தியானது வேறு விஷயத்தில் நாட்டம் இல்லாமல் இடையறாத அன்புப்பெருக்கை உன்னிடம் கொண்டு சேர்க்கட்டும். என் பந்த பாசத்தை அறுத்துவிடுவாயாக.” சூதர் கூறினார், மந்தம் ஜஹாஸ வைகுண்ட: மோஹயன் இவ மாயயா. இதைக்கேட்டு கிருஷ்ணர் எல்லோரயும் மயக்குபவர் போல மாயப்புன்னகை புரிந்தார். பிறகு த்வாரகை செல்ல சித்தமானார். அப்போது யுதிஷ்டிரர் அங்கு வந்து உயிர்வதைக்குக் காரணமாய் இருந்த பாவத்தை எண்ணி வருந்த கிருஷ்ணர் அவரை பீஷ்மரிடம் போகும்படிக் கூறினார். இதுவும் பீஷ்மரின் கடைசி காலத்தில் அவரை உய்விக்கவும் தர்ம உபதேசத்தையும் விஷ்ணுஸஹஸ்ர நாமத்தையும் அவர் வாயிலாக வரவழைப்பதற்காக கிருஷ்ணன் நடத்திய நாடகம்...... படித்ததில் ரசித்தது........

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips