*இன்று ஒரு தகவல்*

பொதிகை மலைக்கு வந்த அகத்தியர்

தாமிரபரணி நதிக்கரையில் பெருமாள்

சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தார்.

இவ்விடத்தை சுற்றி வந்த *மகாலட்சுமி* பெருமாளுடன் ஐக்கியமானாள். அதனால் இத்தலம் *ஶ்ரீவலம் வந்த பேரி* எனப் பெயர் பெற்றது. அதுவே நாளடைவில் *சீவலப்பேரி* என்றானது. மூலவர் *சுந்தரராஜப் பெருமாள்* தாமிரபரணி,

சித்ராநதி, ராமநதி ஆகிய மூன்று நதிகள் இங்கு ஒன்று சேர்கின்றன.  அசுர குரு சுக்ராச்சாரியார் தன் தாயை கொன்ற தோஷத்திற்கு ஆளானார். இதிலிருந்து விடுபட வேண்டி சீவலப்பேரி பெருமாளை வழிபட்டார். *கள்ளழகர்* கோலத்தில் காட்சியளித்த

பெருமாள் அவருக்கு விமோசனம் அளித்தார். இதனால் மதுரையில் உள்ள அழகர்கோவிலை *வட திருமாலிருஞ்சோலை* என்றும், சீவலப்பேரியை *தென் திருமாலிருஞ்சோலை* என்றும் கூறுவர். *சித்ரா பௌர்ணமி* அன்று கள்ளழகர் தாமிரபரணி ஆற்றில் இறங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெறும். இத்தலத்தில் உள்ள *கருடாழ்வார்* ஐ தரிசிக்க கண் தொடர்பான நோய்கள் விலகுகிறது. சீவலப்பேரி என்னும் இத்தலம் திருநெல்வேலி - புளியம்பட்டி சாலையில் 18.0 கி.மீல் உள்ளது.

*ஓம் நமோ நாராயணாய*

Comments

Popular posts from this blog