இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கணும்
புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கணும்.
உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்
பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கணும்
அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கணும்
ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி அழகா இருக்கணும்
உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கணும்
பொங்கல் மாதிரி குழைவா பேசணும்
அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கணும்
பிரியாணிமாதிரி famous ஆ இருக்கணும்
சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கணும்
ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது
நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது
பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது
ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது
புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது
கேசரி மாதிரி இனிமையா பேசணும்
பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கணும்
அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கணும்
அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கணும்
புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கணும்
ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கணும்
டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கணும்.

Comments

Popular posts from this blog