*அதுஅதற்கு ஒரு நேரம் காலம்! தேவை*


*🌺 "சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..."*


*நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...*


*இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.*


*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...*


*இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது..*.


*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.*


*நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.*


*மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.*


*எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.*

*ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.*


*சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.*


*இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.* 

*யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,*

*அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.*


*ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.*


*எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...*


*எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...*


*கட்டிலிலோ, சோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...*


*சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...*


*சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்துs காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...*


*சாப்பிடும் முறை...!*


*1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...*


*2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...*


*3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...*


*4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...*


*5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...*


*6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...*


*7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...*


*8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...*


*9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகள் தயிர் சேர்க்க வேண்டாம்...*


*10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...*


*11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...*


*12. சாப்பிட வேண்டிய நேரம்...*

*காலை - 7 to 8* *மணிக்குள்*

*மதியம் - 1 to 2* *மணிக்குள்*

*இரவு - 7 to 8* *மணிக்குள்*


*13. சாப்பிட்டு 2 மணி* *நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...*


*அமருங்கள் சம்மணமிட்டு...*

*சாப்பிடுங்கள் முறையாக...*

*வாழுங்கள் ஆரோக்கியமாக!...*


*🔴நமது உடல்,* *ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின்* *அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு*

*சுழன்று கொண்டிருக்கிறது.*


*🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது.* *இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.*


*🔴விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.*

*தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.* *ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.*


*🔴விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.* *காலைக் கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்*

*பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்* *உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.*


*🔴காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும்.* *காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள்.*  *இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.*


*🔴காலை 9.00 மணிமுதல் 10.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.*

*காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது.* *இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.* *மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.*

*நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.*


*🔴முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.* *இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.*


*🔴பிற்பகல் 1.00 மணிமுதல் 2.00 மணி வரை சிறு குடலின் நேரம்.*

*இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.*


*🔴பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.*


*🔴மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற,* *எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.*


*🔴இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை, பெரி கார்டியத்தின் நேரம்.*

*பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shockabsorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.*


*🔴இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.*

*உச்சந்தலை முதல் அடி* *வயிறு வரை உள்ள மூன்று* *பகுதிகளை*

*இணைக்கும் பாதை.* *இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.*


*🔴இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.*


*🔴இரவு 1.00 மணி முதல் விடியற் காலை-3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.* *இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.*

*கட்டாயம் படுத்திருக்க வேண்டும்.* *உடல் முழுவதும் ஓடும்* *ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து* *சுத்திகரிக்கும் நேரம் இது*. *இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்*

*சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.*

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips