திருவண்ணாமலையில் மட்டும் சித்தர்கள் அதிகமாக இருக்கிறார்களே ஏன்??*


*திருவண்ணாமலை மலை ஒரு பிரம்மாண்டத்தின் உச்சம்.அதாவது,* *பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் பல மில்லியன் கோடி வருடம் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவபெருமானின் அம்சம். அதாவது பல சிவலிங்கங்களை உள்ளடக்கியது.*


*அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 அதி சக்தி வாய்ந்த சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சித்த புருஷர்கள் சொல்கின்றனர்.* *இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன.*


*இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும்,* *ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் ,* *சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம். மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. 


திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம்,* *நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது சித்தர்களின் பூமி,* *புனித பூமி, எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து தவமிருந்திருக்கிறார்கள்.*


*திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம். நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது.*


*இயல்பாகவே புவியியல் அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது.*


*நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். 


இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. நம் ஓய்வெடுக்கும்ஆழ்ந்த தூக்கத்தின் போது உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.*


*அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி வருகின்றனர். திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டுள்ளது. இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.*


*இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும் மர்மம் இதுதான்.இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள்.*


*சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆதி சித்தர் சிவபெருமான் தான். அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள். கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.*


*என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் , அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்.இப்படிப்பட்ட ஸ்தலத்துக்கு செல்வது நாம் செய்த புண்ணியம். பெளர்ணமி அன்று அண்ணாமலையாரை காண்பது நம் பிறவி புண்ணியம்.*


*ஓம் நமசிவாய.🙏🏻*,

Comments

Popular posts from this blog