https://chat.whatsapp.com/EzEjGOqK0K98tJGMds3RBm



International Day of Girl Child 2021 is very special. This year the theme of International Day of the Girl Child is "My voice, our equal future".


அக்டோபர் 11: உலக பெண் குழந்தைகள் தினம்


கடந்த 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகளை இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது.


அது முதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை பத்தாவது ஆண்டு பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.


உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என்றும், அதன் மூலம் சமூகம் முன்னேறும் என்றும் வலியுறுத்துகிறது ஐ.நா. இந்நாளில், உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.


காஷ்மீர் சிறுமி

ஆசிபா,

கத்துவா, உன்னாவ், ஹத்ராஸ் போன்ற சிறுமிகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள், இந்நாளுக்கான முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகெங்கும் இதுபோன்ற கொடூர செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.


கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.

Comments

Popular posts from this blog