பேங்க்-ல் கேஷியரிடம் பணத்தை வாங்கி எண்ணும்போது
ஒரு தாள் குறைவது போல் இருந்தது...
“மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா” - ன்னுதான் கேட்டேன் !
பேங்க் கேஷியர் கொஞ்சம் திமிராக ”ஏன் ஒரு தாள் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார் சரியா இருக்கும் !
நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது ! ” ...அப்படீன்னாங்க !
”இல்ல மேடம் ! ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு! " ன்னேன் !
....சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி,
மெஷினில் நாலு தரமும்,கையால் நாலு தரமும் எண்ணி கொடுத்தார்...!!
இதனால் அறியப்பட்ட நீதி...!!
" தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் ! "
*யாரோ* அனுப்பியது😁😁😁😂😂😂
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான், ...
Comments
Post a Comment