*நாம் துவக்கி வைப்போம்.... இந்த மாற்றத்தை.....👇* குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசில்லாமல் திணரும் ஒருவரை நீங்கள் கவனித்ததுண்டா...? உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறிவிடும். எளிமையா ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா???? சிலமணி நேரத்தில் பணம் எப்படி தயார் செய்வது???? என்ற நெருக்கடியை நினைத்து அழுவதா..?. கடன் பழக்கமே, இல்லாதவர்களைக் கூட அச்சூழல் வட்டிக்கடைக்கும், அடகு கடைக்கும் கொண்டு போய் தள்ளும். . இது விசயத்தில் முக்கியமான ஒரு கருத்தை எல்லோரும் தயவுசெய்து ஏற்கவேண்டும் அல்லது இனிமேலாவது இந்த செயலை ஏற்படுத்த வேண்டும்... அப்படி என்ன செயல்?... இனிமேல் *எந்த துக்கம் வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்?...* நாம் மாலை வாங்கி போட்ட அடுத்த நிமிடமே..... அந்த மாலையை வெளியே எடுத்து வந்து ஒரு இடத்தில் மாட்டி விடுவார்கள்... பின்னர் அந்த மாலையை ரோட்டில் போட்டு குப்பையாக்கி, அதுவும் மெயின் ரோட்டில் இது தேவையா?.... அந்த பூ மாலையை நூறு /நூற்று ஐம்பது / ஐநூறு /ஆயிரம் செலவு செய்வதை..... *இறந்துபோன குடும்பத்திற்கு பணமாக கொடுத்தால், அவர்களுக்கு ஈமக்கிரியை செலவுக்கு ஆகும்* ஏழையோ பணக்கார குடும்பமோ எல்லா இடங்களிலும் கூலர் பாக்ஸ் (ஓர் இருபது வருடங்களுக்கு முன்பு கையில் தான் தூக்கி போவார்கள் ஆனால் இன்று உடலிலும் தெம்பு இல்லை மனதிலும் தெம்பு இல்லை) தள்ளிக்கிட்டு போக ஓட்டிகிட்டு போக வண்டி என ஏகப்பட்ட செலவுகள் வந்து விடும்... எனவே....இனி வரும் காலத்தில் இதை பற்றி சிந்திக்க வேண்டும்.... திருமண வீடுகளில் மொய் எழுத்தும் பழக்கம் நாம் அறிந்த ஒன்று தான். “ஏதோ கடன உடன வாங்கி கல்யாணம் பண்றான்.,நாம எழுதுற மொய்ப்பணம் கொஞ்சம் அவனுக்கு உதவியா இருக்குமே” என்பதால் தான், இந்த மொய்பழக்கம்.... கல்யாணம் என்பது திடீர் செலவு இல்லை. நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி நாள்/ மண்டபம் குறிச்சு நம்ம திட்டப்படி கல்யாணம் நடத்திக்கலாம். பல சடங்கு சம்பிரதாயங்கள் இப்படி ஏதோ காரணத்துக்காக ஏதோ ஒரு காலநெருக்கடியில உருவாகி இருக்கலாம். ஆனா *கல்யாண வீட்டை விட இறந்தவர் வீட்டில தான் சார்..... மொய் எழுதும் பழக்கம் ரொம்பவே முக்கியம் ..* சில ஏரியாகளில் இந்த பழக்கம் இருக்கலாம்.. தெரியல?? ஆனா பெரும்பாலும் இல்லை தானே. அம்மாவ அப்பாவ அண்ணன தம்பிய பிள்ளைய இழந்த ஒருத்தன் நம்ம கண்ணு முன்னாடி சாவு செலவுக்கு காசில்லாம அலையலாமா...?தன்மானம் சுட அவன நாம கடனோ உதவியோ கேட்கவிடலாமா..? உண்மையில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனொருவனின் கரங்களை இறுக பற்றி *“நாங்க இருக்கோம்யா, தைரியாமாஇருயா செலவ பாத்துக்கலாம்”னு* சகமனிதனாக நாம் சொல்லவேண்டிய தருணம் அது தான்... இதுவரை இல்லாவிட்டாலும்..... இனி இப்படியொரு பழக்கத்தை துவங்குதல் நல்லது... அந்த வீட்ல இறப்பைத்தவிர பணத்திற்காக ஒருத்தன் அழக்கூடாது..... நாம் அனைவரும் மனம் வைத்தால் கண்டிப்பாக ஓர் நல்ல மாற்றம் கிடைக்கும் செய்வோமா? *கண்டிப்பாக செய்தே தீரவேண்டும்* இந்த பதிவை மனிதநேயம் உள்ள ஒரு மனிதர் பதிவிட்டுள்ளார் அதன் மூலம் நானும் உங்களுக்கு பகிர்கிறேன் அனைத்து குழுமங்களிலும் பகிருங்கள் .. ஏழை மாணவர்கள் நலச்சங்கம் மின்னல்

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips