*சதாபிஷேகம் கண்டவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று சொல்வது ஏன்?*
"*80 வயது ஆனவர்களை ( உண்மையாக அன்போடு வாழ்ந்தவர்கள்) ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம்.*
*ஆயிரம் பிறை என்பதை எப்படிக் கணக்கிடுவது?* "
*80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம் பிறையை கண்டவர்கள் என்கிறோம்.*
*80வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். ( பிறை தரிசனம் செய்தவர்கள்) சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில்30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் பார்த்ததாக நிறைவுபெறும்.* "
*ஆயிரம் பிறை கண்ட வாழ்வு:*
*ஆயிரம் பிறை காணுகிற பெரியவருக்கு, ஆயிரம் பிறைகளைக் கணக்கிட்டால் 83 ஆண்டுகள்அவர் கடந்தாக வேண்டும். அவர் 80வது ஆண்டினை நிறைவு செய்கின்ற பொழுதே அவரைஆயிரம் பிறை கண்டவர் என்று ஆசி பெறுகிறோம்.*
*கணக்குப்படி அது 83 ஆண்டாக வருகிறது. ஆனால், நடைமுறையோ 80 என்று எடுத்துக்கொள்கிறோம். பௌர்ணமிகள் சில ஆண்டுகளில் கூடுதலாகவும், குறைவாகவும் வரலாம். அந்தக்கணக்கின்படி, இந்த 80 ஆண்டுகளும் சற்றுக் கூடலாம்.*
*80 வயதைக் கடந்தாலே அது ஒரு பூரண வாழ்வு ( முழுவதும் சந்தோஷமான வாழ்வு வாழ்ந்தவர்) பெற்றவர் எனப் பெருமிதம் அடைகிறோம்.*
*80 வயது பூர்த்தி என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரம் என்று சொல்வதற்குக் காரணம், அந்த 80வயதிற்குள் 20-வது வயதிலிருந்து 60 ஆண்டுக் காலத்திற்கான, சம்பந்தப்பட்டவர்களுடைய செயல்கள் பதிவாகியிருக்கும். அந்தப் பதிவுகள் அனைத்துமே அவர்பட்ட தோல்விகளாகவோ அல்லது வெற்றிகளாகவோ இருக்கும்.*
*மேலும் அவர் தமிழ் 60 ஆண்டுகளையும் பூரணமாக கடந்து செல்லும் பாக்யம் பெறுகிறார். அத்தகைய சிறப்பு பெற்றவர்களாகிறார்கள் ஆயிரம் பிறை கண்டவர்கள்.*
*30 ஆண்டுகளில் அவர் தோல்வி கண்டிருந்தால், மேலும் ஐந்து ஆண்டுகளோ, பத்தாண்டுகளோ செலவழித்து அந்தத் தோல்வியை வெற்றியாக்கி இருப்பார். அந்த ரகசியம் அவருக்குத்தான் தெரியும்.*
*அது அவருடைய 60 ஆண்டு வாழ்வியல் சரித்திரத்தை நினைவுகூர்ந்தால் அவர்சிந்தனையிலிருந்து அது உடனே வெளிப்படும்.*
*இப்படித்தான் 80 ஆண்டு பெரியவரின் வாழ்க்கை, 60 ஆண்டு – பேசும் சரித்திரமாக நம் முன்னால் உலவும்.*
*நாம் பெருமிதமாக நினைப்பது இந்தச் சரித்திரத்தையே தவிர, அவருடைய சரீரத்தை ( அவரது உடலை) அல்ல.*
*60 ஆண்டை சம்ஸ்கிருதத்தில் சஷ்டியப்தபூர்த்தி என்கிறார்கள்.*
*70 ஆண்டு நிறைவை பீமரத சாந்திஎன்கிறார்கள்.*
*80 ஆண்டு நிறைவை சதாபிஷேகம் என்கிறார்கள்.*
*சதாபிஷேகம் காணும் முதிய தம்பதிகள் அதிகமாக இல்லை. அப்படி இருப்பார்களேயானால், அது அவர்களின் பிள்ளைகள் செய்த பாக்கியமாகும்.*
.*இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.*
தருமபுத்திரர் செய்த ராஜசூய யாகத்தைக் காண்பதற்காகச் சனகாதிகள் போயிருந்தார்களாம்.
அவர்கள் போனதற்கான காரணம், தருமபுத்திரரின் ராஜசூய யாகத்திற்கு வாசுதேவர் வருவார்.
அவ்வாறு வந்தால், அவரை வணங்கலாம் என்பதுதான் அவர்களின் ஆசையாகும்.
அவர்கள்எதிர்பார்த்தபடி வந்த வாசுதேவரோ, ஒரு காரியத்தைச் செய்தார்.
ராஜசூய யாகத்தில் கலந்துசிறப்பிக்க வந்திருந்த சில முதியவர்களை வாசுதேவர் பாத நமஸ்காரம் செய்தார்.
வாசுதேவரை வணங்குவதற்காகக் காத்திருந்த சனகாதிகளுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.
அதனால் வாசுதேவரிடமே சென்று இது என்ன? நாங்களெல்லாம் உங்களை வணங்கக்காத்திருக்கிறோம். ஏன் உலகமே உங்களைத்தான் வணங்குகிறது.
அத்தகைய நீங்களோ, வேறுயாரையோ நமஸ்கரிக்கிறீர்களே என்று பரமாத்மாவாகிய வாசுதேவனிடமே கேட்டனர்.
பகவான் சொன்ன பதிலோ, சனகாதிகளுக்கு மேலும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.
அதற்கானசமஸ்கிருத சுலோகத்தைத் தமிழ்ப்படுத்தினால், நான் 6 முக்கியமானவர்களை வணங்குகிறேன்.அவர்கள் வணங்கத் தக்கவர்கள்.
என்னால் வணங்கத்தக்கவர்கள் என்றால், அவர்கள் 6 பேரும்எப்பேர்ப்பட்டவர்கள் என்று எண்ணிப் பாருங்கள் என்றார்.
*அவர்கள் யார் என்று கேட்க, பகவான் கூறினார்*
1.தினசரி அன்னம் பாலிப்பவன்,
2.வாலிபவயதிலேயே யாகம் செய்பவன்,
3.உலகத்தை ஒரு நாள், இரு நாள் அல்ல, மாதக்கணக்கில்,வருடக்கணக்கில் மேற்கொள்பவன்,
4.கற்புக்கரசியாக வாழ்கிற பெண்கள்,
5.பிரமமத்தைஅறிந்த ஞானிகள். இந்த ஐவர்களை மட்டுமல்ல
6 வதாகவும் ஒருவர் இருக்கிறார்.
*அவர்தான்ஆயிரம்பிறை கண்ட பெரியவர் என்கிறார் வாசுதேவர்.*
*கிருஷ்ண பகவானை உயிர்கள் அனைத்தும் நமஸ்கரிக்கின்றன. அவரோ சதாபிஷேகம்செய்யப்படும் சான்றோரை வணங்குகிறார் என்றால், ஆயிரம்பிறை காண்பவருக்கு எத்தனைப்பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது என்பதை நித்யசூரிகளான சனகாதிகளேபுரிந்துகொள்ளும்படி கூறினார்.*
*இந்த ஆயிரம்பிறை சதாபிஷேகத்தை அதிருத்ர யாகம் செய்தும் கொண்டாடலாம் என்கிறதுநமது புராணங்கள்.ருத்ரகாதசினீ என்று இன்னொரு யாகம். அதைச் செய்வதன்மூலம் சதாபிஷேகம் கண்டவர் தனதுவாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் பாவம் செய்திருந்தால், இந்த யாகம் அதைப்போக்கும் சக்தியுடையதாக அமைகிறது.*
*இதைப் போன்றதுதான் மகாருத்ர யாகம்.*
*ருத்ரகாதசினீ யாகத்தை பதினோரு கலசங்கள்வைத்து ஜபம் செய்வதாகும். ஒவ்வொரு கலசத்திலும் ஒரு ருத்திரர் ஆவாகனம் செய்யப்படுவார்.*
*இதை 11 முறை செய்வதுதான் மகாருத்ர யாகமாகும். 121 முறை செய்வதுதான் அதிருத்ரயாகமாகும்.*
*இத்தனை யாகங்களையும் செய்தால், அதற்கு உரியவன் எந்தப் பாவம் செய்திருந்தாலும்அதிலிருந்து விடுதலை பெறுவான்.என்பது ஐதீகம்.*
*அதுமட்டுமல்ல. அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் சித்திக்கும். இதற்குச் சமமான ஜபம்வேதஸ்மிருதி எதிலும் இல்லை. இப்புண்ணியருக்கு அந்த யாகம் செய்த பிறகு வைக்கப்படும்நாமகரணம் சகஸ்ர சந்திர தர்சி என்பதாகும்.*
*சதாபிஷேகம் கண்டவரும், அவருடைய தர்மபத்தினியும் அந்த நிமிடம் முதல் பார்வதி –பரமேஸ்வர தம்பதியாக மாறிவிடுகிறார்கள். இவர்களை நமஸ்கரித்து நாம் ஆசி பெற்றால்,அவர்கள் நம்மை வாழ்த்தும் வாக்கு அப்படியே பலித்து நன்மை உண்டாகும்.*
*இந்த சாந்தியைச் செய்து ஆயிரம்பிறை கண்ட தெய்வத் திருவுருவங்களாகப் பேறுபெற்றவர்களை நாம் வணங்கினால் நீண்ட ஆயுள், தேக ஆரோக்கியம், ஐஸ்வர்யம்,புகழ், முதலியவற்றைப் பெற்று நூறு ஆண்டுகள் நாம் வாழும் பாக்யம் பெறுவோம் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.*
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான்,
Comments
Post a Comment