*மார்கழி மாத பக்தியின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :* மார்கழி மாதம் என்றாலே கடவுள் வழிபாட்டுக்கான உகந்த மாதமாக கருதப்படுகிறது. தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் தான் நம் உடலுக்கு அதிகமாக ஆக்சிஜன் கிடைக்கிறது. மார்கழி மாதத்தில் கோவில்களில் அதிகாலை வழிபாட்டில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன. *மார்கழி மாத சிறப்பு:* மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை எழுந்ததும் குளிர்ந்த நீரில் பெண்கள் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவனை வழிபாடு செய்வது இன்றும் வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித சுப நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். *சுத்தமான காற்று:* நமது உடலில் பொதுவாக 80% ஆக்சிஜனும், 20% கரியமில வாய்வும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் நவீன காலத்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து பல நோய்களை ஏற்படுத்துகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலத்தில் இருந்து வரும் சுத்தமான காற்று வேறு எந்த மாதத்திலும் கிடைக்காது. அதனால் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பொழுது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைத்து ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். *MJF.LN.K.R.KANNAN@KRK*

Comments

Popular posts from this blog