எவரை *சரணடைந்தால்* சம்சார பந்தம் அறுபடும். *யுதிஷ்டிரஉவாச* : கிமேகம் தைவதம் லோ கே கிம் வாப்யேகம் பராயாணம்: சத்துவந்த; கம் கமர்ச்சந்த: ப்ராப்நியூர் மணவாஸ் ஸுபம்’’ யுதிஷ்டிரன் பய பக்தியுடன் பீஷ்மரை மெதுவாக கேட்கிறான்: ''இந்த பூவுலகிற்கே ஒரே கடவுள் என்று எவரைச் சரணடையலாம்? '' என கேட்கிறான் யுதிஷ்டிரன். ‘’கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: | கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜந்ம ஸம்ஸார பந்த நாத் ‘’இந்த மனித குலமே எவரை போற்றி துதித்து, வழிபட்டு அமைதியும், வளமும் பெற்று உய்யமுடியும் ?’’ ‘’எவரை *உபாசித்தால்* பிறவியினால் ஏற்படும் பந்தங்களை, கட்டுக்களை உதறிவிட்டு பரிசுத்தமாகலாம்? எது சிறந்த, உயர்ந்த தர்மம் என்று உங்களுக்கு தோன்றுகிறது?’’ ‘’கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜென்ம சம்சார பந்தனாத்:’’ ‘’எந்த மந்திரங்களை உச்சரித்து ஒருவன் பிறவி - மரண துன்பத்திலிருந்து விடுபட முடியும்?’’ '' தாத்தா, நீங்கள் எல்லாம் தெரிந்தவர், நீங்களே சொல்லுங்கள்,நீங்கள் எதை உயர்ந்த தர்மம் என்று கருதுகிறீர்கள்? எந்த ஜெபத்தை, மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உலக ஜீவ ராசிகள் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறும்?'' - யுதிஷ்டிரன். *ஸ்ரீபீஷ்மஉவாச* : ‘’ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம் | ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: || ''இந்த பூவுலகில் எல்லோர் நலனுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தன்னையே தியாகம் செயது கொள்பவர் ஸ்ரீ மஹா விஷ்ணு ஒருவரே. ஆதி அந்தம் இல்லாத பிரபு'' ‘’தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம் | த்யாயந் ஸ்துவந்நாமஸ்யம்ச யஜமாநஸ் தமேவச || அப்படிப் பட்ட மகா புருஷனை ஸ்தோத்ரம் பண்ணியும், வழிபட்டும் ஒருவன் முக்தி பெறலாம். ‘’அநாதி நிதநம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம் | லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வதுக்காதிகோ பவேத் || தர்ம ஸ்வரூபனான மூவுலகும் காப்பவனான மஹாவிஷ்ணு ஆதியோ அந்தமோ இல்லாத மகேஸ்வரன். அவனது நாமத்தை நாமத்தை ஸ்மரிப்பவன் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு துக்கங்களற்ற நிலை அடைகிறான். ‘’ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம் | லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் || ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோமத: | யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச்சேந் நர:ஸதா|| பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: | பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் || மகா விஷ்ணுவை தான் ஒளி மயமான 'மஹத்' என்போம் . அவரல்லவோ சர்வ ஜன ரக்ஷகர். சத்ய ஸ்வரூப மானவர். பர ப்ரம்மம் ; பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் | தைவதம் தேவதாநாம் ச பூதாநாம் யோவ்யய: பிதா || எதெல்லாம் பவித்ரம் என்று கருதுகிறோமோ அவற்றையே பவித்ரமாக்குபவர் மஹா விஷ்ணு. தேவாதி தேவன். சாஸ்வதன் . ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தை. யத: ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே | யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புநரேவ யுக்க்ஷயே || யுக சந்திகளில் பிரளயம் நேரிடும்.அப்போது சகல ஜீவராசிகளும் அழியும். பிரளய முடிவில் அனைத்தும் மீண்டும் தோன்றும்.எல்லாம் அவனிலிருந்து வந்தவை. முடிவில் அவனடியே சேரும். தஸ்ய: லோக ப்ரதாநஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே| விஷ்ணோர்நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் || ‘’யுதிஷ்டிரா, நான் உனக்கு அந்த கீர்த்தி வாய்ந்த மகா விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை சொல்கிறேன். வேதங்கள் அவனையே பாடுகின்றன ஏனென்றால் அவனல்லவோ அனைத்து பாபங்களையும் சம்சார பயத்தையும் போக்குபவன். ‘’யாநி நாமாநி கௌணாநி விக்யாதாநி மஹாத்மநா : | ரிஷி பி: பரிகீதாநி தாநி வக்ஷ்யாமி பூதயே || ''நான் சொல்லப்போகும் விஷ்ணுவின் நாமங்கள் எல்லாமே அவனது கல்யாண குணங்களை அறிவுறுத்தும். ரிஷிகளின் வாக்கியங்களில் பொதிந்தவை அவை. ரிஷிர் நாம்நாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹா முநி: | சந்தோ அநுஷ்டுப் ததா தேவோ பகவாந் தேவகீஸுத: || ''ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயர் கொண்ட வேத வியாசர் தான் இந்த ஆயிரம் நாமங்களை தொகுத்து அளித்தவர். அவை அனுஷ்டுப் எனும் சப்த அளவில் சொல்லவேண்டும். இந்த ஆயிர நாமங்களுக்கும் தலைவன், நாயகன், தேவகி மைந்தனான ஸ்ரீ கிருஷ்ணனே.🙏🙏🙏

Comments

Popular posts from this blog