*ஒரு ஆலயத்தின் மண்ணை மிதிக்கும்பொழுதே, கிரக நிலை கொண்ட மனிதர்களின் தோஷங்கள் குறையட்டும் என்பதற்காக வித விதமான ஆலயங்கள் இங்கே எழுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஒரே ஆலயம், சராசரி மனிதன் செல்லும்பொழுது உலகியல் தேவையை தரும் தருவாகத் தோன்றுகிறது. அதே ஆலயத்திற்கு ஓரளவு பற்றை விட்ட ஞானி செல்லும் பொழுது முக்தியை நல்குகின்ற ஆலயமாகத் தோன்றுகிறது. எனவே, இருப்பது அகுதொப்ப ஒரே ஆலயம்தான். செல்லுகின்ற பக்தர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, மனோ தர்மத்திற்கு ஏற்ப, மன பக்குவத்திற்கு ஏற்ப அந்த மனிதனுக்கு நல்லருளை வழங்குகிறது. "எதுவும் வேண்டாம் இறைவா, நீதான் வேண்டும்" என்று வேண்டுகின்ற உள்ளங்கள் ஆலயம் செல்லும் பொழுது அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டுள்ள ஆலயமாக இருந்தாலும், அகுதொப்பவே நலம் நடக்கின்றது.* - அகத்திய மஹரிஷி

Comments

Popular posts from this blog

Thought for the Day - Activity for the Brain