நாளைய தினம் அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்களின் கவனத்திற்காக*
அனுமன் ஜெயந்தி...
🙏மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. இதுபோல், திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம். இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் இந்த நல்ல நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
🙏அந்த வகையில் இந்த வருடம் அனுமன் ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை (02.01.2022) வரவிருப்பதால், அனைத்து அனுமன் கோவில்களிலும் விமர்சையாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம்.
அனுமன் ஜெயந்தி... விரதம் இருக்கும் முறை :
🙏அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும்.
🙏அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அல்லது வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றியும் வணங்கலாம்.
🙏அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.
🙏பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.
🙏காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.
🙏மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம்.
🙏மாலையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலைகளை சாற்றி வழிபடலாம்.
🙏இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராம நாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், ஸ்லோகங்கள் கூறி வழிபட வேண்டும்.
விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் :
🙏அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும்.
🙏நினைத்த காரியம் கைகூடும்.
🙏துன்பங்கள் விலகும்.
🙏இன்பங்கள் பெருகும்.
🙏குறிப்பாக சனியின் பிடியில் உள்ளவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம் :
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
ஹனுமன் ப்ரசோதயாத்
🙏சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர். சிவனையும், திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர். எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறுவோம்.
இறைபணியில்
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான், ...
Comments
Post a Comment