*பக்தர்கள் வித்தியாசமான நைவேத்தியம் படைத்து வழிபடும் கோவில்கள்* திருவாரூர் அருகே உள்ளது, திருக்காரவாசல் என்ற திருத்தலம். இங்கு கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், நான்முகனான பிரம்மனுக்கு, ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர் ஆவார். இந்த இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழம் நைவேத்தியம் செய்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும். மண்டையப்பம் நாகர்கோவில் அருகே உள்ள மண்டைக்காட்டில் பகவதி அம்மன் திருக்கோவில் இருக்கிறது. தலைவலியால் பாதிக்கப்படும் பக்தர்கள், இங்கு வந்து பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து ‘மண்டையப்பம்’ என்னும் நைவேத்தியத்தை செய்து அம்மனுக்கு படைத்து வழிபடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தலைவலி நீங்குவதாக நம்பிக்கை. அவல் கேரளா மாநிலம் தலைச்சேரி அருகில் திருவெண்காடு என்ற திருத்தலம் இருக்கிறது. இங்கு ராமசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ராமரும், அனுமனும் மட்டுமே அருள்பாலிக்கிறார்கள். ராமனுக்கு எதிரில், அவரை வணங்கிய நிலையில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு அவல் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. *நம் *ஈசனை தேடி* யூடிப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள் 👇👇👇 *https://youtu.be/pStCBwtR7jc* 👇👇👇 *https://youtube.com/channel/UCXS8nEe-gFYeoiTMwhSn-lA*

Comments

Popular posts from this blog