ஆதிலக்ஷ்மி! ‘பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவது வழக்கம்; இன்றும் நம்மிடையே உள்ள சம்பிரதாயமாகும். பதினாறு வகைச் செல்வத்துக்கும் மூலமாக விளங்குபவள் ‘ஆதிலக்ஷ்மி.’ சௌந்தர்ய லக்ஷ்மி, சௌபாக்கிய லக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, துஷ்டி லக்ஷ்மி, புஷ்டி லக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சக்தி லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, ஆரோக்கிய லக்ஷ்மி, ஆதிலக்ஷ்மி என்று பதினாறாகவும் விளங்குபவள். முக்கோணத்தின் நடுவில் ‘ஆதிலக்ஷ்மி’; மற்றைய மூன்று பக்கங்களிலும் 5 + 5 = 5 பேர்களாக பூஜிக்கப்படுபவள். முதலும் முடிவும் இல்லாதவள் ஆதிலக்ஷ்மி. தேவாசுரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்தவள் இவளே. இவள் அஷ்ட மங்கலப் பொருள்களோடு கூடிய பீடத்தில் அருள்புரிபவள். இவளை வணங்கினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும். ஸ்ரீமந் நாராயணனிடம் என்றும் நீங்காது இருப்பவள். இதனாலேயே பெருமானின் வலது பக்க மார்பில் ஸ்ரீவத்சம் என்ற முக்கோண வடிவில் விளங்குகின்றாள். அதனாலேயே, இந்த லக்ஷ்மிக்கு இரண்டே கரங்கள். ஆதியாக இருப்பதனால், இவளே சகல உயிர்களுக்கும் சகல காரியங்களுக்கும் மூலாதாரமாகும்.

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips