ஐந்து முகங்களின் முக்கியத்துவம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கிழக்கே பார்க்கும் முகம்: ஸ்ரீஆஞ்சநேயரின் திருமுகம். இவர் பாவங்களின் கரையை நீக்கி, தூய்மையான மனதை சிந்தனையை அளிப்பவர். தெற்கே பார்க்கும் முகம்: ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் திருமுகம். இவர் எதிர்களிடம் உள்ள நம் பயத்தை போக்கி, வெற்றியை அளிப்பவர். மேற்கே பார்க்கும் முகம்: ஸ்ரீமகாவீர கருடன் திருமுகம். இவருடைய அருளால் தீயசக்திகள், பில்லி, சூன்யம் ஆகியவற்றின் ஆதிக்கம், உடலில் உள்ள விஷத் தன்மைகள் இவை உடனே விலகிவிடும். வடக்கே பார்க்கும் முகம்: ஸ்ரீலட்சுமி வராக மூர்த்தி ஸ்வாமி திருமுகம். கிரகங்களால் ஏற்படக்கூடிய கெட்ட விளைவுகளை நீக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களும், வளமான வாழ்வும் இவர் அருளால் கிடைக்கும். வானத்தை பார்க்கும் முகம்: ஸ்ரீஹயக்ரீவ ஸ்வாமி திருமுகம். இவர் ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை வழங்குவார்..

Comments

Popular posts from this blog