ஒரு சிலா் பக்தி, கோயில், பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறாா்கள்.
ஆனால் இன்னும் சிலா், "சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறாா்கள்". எது சாி?
ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன்...இதே கேள்வியைக் கேட்டான்.
ஆதிசங்கரா் அவனிடம் "மகனே இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய்.
நான் உன்க்கு பதில் அளிக்கிறேன்!" என்றாா்.
அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான்.
சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தாா்.
அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தாா்.
அதற்கு அவன் "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்.
"ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா?
அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?"
"மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீா்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி!"
"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!" அவனவன் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும்.
ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.
*ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.*
*நாம் வழிபடவும், வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்* .
*நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும்* அவா் வேண்டும்.
எனவே தான் " *கல்லோடு ஆயினும் சொல்லி அழு" என முன்னோா்கள் சொல்லியிருக்கிறாா்கள்.*
ஸ்ரீ குருப்யோ நமஹ ! 🌷🌷🌷
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment