*நல்லது நடக்கும். நல்லதே நடக்கும் ஆனந்தமாக இருப்போம்*🙏🔥 உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப் பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் "விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார்." உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும். சமைக்கும் பொழுது கணவரை குழந்தைகளை நினைத்து வாழ்த்தி, அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து சமைத்தல் வேண்டும். அதுமட்டுமன்றி தெய்வீகமான பாடல்களை கேட்டுக்கொண்டே சமைக்கும் பொழுது அதனுடைய அதிர்வுகள் சமைக்கும் உணவில் உள்ள தண்ணீரினால் உள் வாங்கப்படுகிறது. இறைவனை நினைத்துக் கொண்டே சமைக்கும் பொழுது, நம்முடைய குடும்பத்தினருக்கு, குழந்தைகளுக்கு இறை உணர்வு உணவின் வழியாக கொடுக்கப் படுகிறது. அசுத்தமான சூழ்நிலையில் நாம் சுவாசிக்கும் பொழுது , அசுத்தமான தண்ணீர் குடிக்கும் பொழுது, அசுத்தமான உணவை உண்ணும் பொழுது நம் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அதுபோல் நாம் கோபத்துடன் சமைப்பது, வேண்டாவெறுப்புடன் சமைப்பது, டிவியில் வரும் வன்முறை காட்சிகள், அழுகை காட்சிகள் போன்றவற்றை கேட்டுக்கொண்டு சமைப்பது போன்றவை நம் குடும்பத்தினருக்கு, தேவையில்லாத உணர்வுகளை கொடுக்கிறது. நம் குடும்பத்தில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள், முரட்டுத்தனமாக நடக்கும் குழந்தைகள், கோபப்படும் கணவர், மாமியார் போன்றவர்கள் நாம் அன்புடன் வாழ்த்தி சமைக்கும் உணவினால், தெய்வீக பாடல்களை கேட்டுக்கொண்டே சமைக்கும் உணவை உண்பதினால், அவர்களுடைய எண்ணங்களில் செயல்களில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். எனவே அவசர அவசரமாக பரிமாறாமல், டிவி பார்த்துக்கொண்டே பரிமாறாமல், குழந்தைகளும் கணவரும் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடாமல், அனைவரும் குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் பொழுது ஆரோக்கியமான உடல்நிலை மட்டுமல்ல மனநிலை மற்றும் நற் பண்புகள், நற்குணங்கள், தெளிவாக பேசும் தன்மை, தெளிவாக முடிவு எடுக்கும் தன்மை, போன்ற மாற்றங்கள் குடும்பத்தினரிடம் ஏற்படுவதை உணரலாம். இது ஒரு வாட்ஸ் ஆப் பதிவு. சற்றுமுன் படித்தேன். இது நல்ல பதிவானதால் பகிர்கிறேன். பதிவிட்டவருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 🙏🙏 ஸமஸ்த லோகா ஸுகினோ பவந்து😃🙏

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips