*ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?*
100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான்
இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!
சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது
அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும்.
பொதுவாக நாம் எந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும்.
ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை,
திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர்.
திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர்.
பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார்.
அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது.
ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம்.
இங்கு பெருமாளும்,
தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர்.
தல சிறப்பு: இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம்.
இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி
நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.
இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம்.
நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது.
உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில்.
இரண்டாவதுதான் திருப்பதி!
திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரை இங்கு தான் மணந்தார்.
இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு.
ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம்.
திருப்பதி கோவிலை காட்டிலும் இந்த கோவில் மிக பழமையானது.
இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது.
சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள் என்று சொன்னால் தான் அனைவர்க்கும் இங்கே தெரியும்
கையில் திருமண காப்போடு இருக்கும் இந்த பெருமாள் திருமண தடையை நீக்குவதில் வல்லவர்.
திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் நாராயணபுரம் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளையும் தாயாரையும் ஒருசேர தரிசித்து மகிழலாம்
உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வரும்போது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம் ஒன்றை பார்க்கலாம்!
இப்போதெல்லாம் இது போன்ற கையால் மாவு அரைக்கின்ற இயந்திரம் எங்கே
இருக்கிறது? என்று தேடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.
தரிசனம் முடித்து வெளியே வந்ததும்,அருமையான
ருசியோ ருசியான கோயில் பிரசாதம் புளியோதரையை சிந்தாமல் சிதறாமல்
தொன்னையில் அள்ளிக் கொடுக்கின்றார்கள்.
பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க பெருமாளை வேண்டி செல்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டது.
மிக மிக அழகாய் பராமரித்துக் கொண்டு வருகின்றார்கள்.
பெயர்ப்பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது.
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயண வனம் உள்ளது
இந்த நாராயண வனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது.
பத்மாவதி என்று அழைக்கப்படும் தாயார் இந்த இடத்தில்தான் வளர்ந்தார்கள்.
திரு வெங்கடேசப்பெருமானின் திருமணம் இந்த இடத்தில்தான் நடந்தது.
அந்த திருமணத்தை காண
33 கோடி கடவுள்களும் அணிவகுத்து நின்றார்களாம் .
வெங்கடேசப்பெருமான் மற்றும் பத்மாவதி தேவி அவர்கள் திருமணம் முடிந்த பின்பு திருப்பதிக்கு செல்லும் வழியில் அப்பலயகுண்ட என்ற ஊரில் ஓய்வெடுத்துவிட்டு சென்றுள்ளார்கள்.
இந்த ஊர் திருப்பதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
திருப்பதிக்கு செல்லும் வழியில் இது அமைந்திருப்பதால் இதை மறக்காமல் பார்த்து விட்டு செல்ல வேண்டும்.
இது மிக அழகான முறையில் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்றாகும் இந்தக் கோவிலில் உள்ள தெய்வங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றார்கள்.
இந்த கோவிலில் மிக முக்கியமான இரண்டு கடவுள் யார் என்றால் பத்மாவதியும் ஆண்டாளும் ஆவார்கள்.
இந்தக் கோவிலில் தரிசனம் பெறுவது மிக சுலபமான ஒன்றாகும்.
பத்மாவதி தாயாருக்கும் சீனிவாச பெருமாளுக்கும் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்பட்டார்.
அப்போது மணமக்கள் இருவரும் வேங்கட மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர்.
அவர்களுக்கு அகத்தியர் தடபுடலாக விருந்தளித்தார்.
அப்போது அகத்தியர், ‘திருமணமான தம்பதிகள்
ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது’ என கூறிவிட்டார்.
மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது? அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாளும், பத்மாவதி தாயாரும் திருமலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.
அப்படி பெருமாள் தங்கிய தலம்தான் இப்போதைய
சீனிவாசமங்காபுரம் என்று கூறப்படுகிறது.
சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படுகிறது.
புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.
தனக்கு திருமணம் நடந்த நாராயண வனத்தில் 5அடி உயரத்தில் பால்ய வடிவிலும், சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமான வாலிப வடிவத்திலும்,
திருமலையில் 6அடி உயரத்தில் குடும்பதலைவர் கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார்.
இம்மூன்று முர்த்திகளும் சீனிவாச பெருமாளின் ஒரே வடிவங்களே.
சீனிவாசமங்காபுரம் கோயிலில் உள்ள கருவறையில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நடுநாயகமாக சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும்,
வலது புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த திருக்கோலத்திலும்,
இடது புறம் ஸ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார்.
நாராயண வனம் எங்கு இருக்கிறது?
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.
திருச்சானூரிலிருந்து
31கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம்.
இத்தலத்திற்கு 7கிமீ தொலைவில் நாகலாபுரம் தலம் உள்ளது. இது மச்சாவதாரத் திருத்தலம்.
இன்னும் சற்றுத் தொலைவில் பிரதோஷப் பூஜை தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்த தலமான சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் இருக்கிறது.
நாராயணவனத்தில் தரிசனம் முடித்து அப்படியே அருகில் நாகலாபுரத்தில் இருக்கின்ற வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்கு சென்றால் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல,ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தரிசனம் பெற்ற மகிழ்ச்சியுடன்
ஆயிரம் அத்திவரதர் தரிசனத்திற்கு சமமான
ஸ்ரீ வேதநாராயண பெருமாளின் தரிசனத்தையும் நாம் பெறலாம்.
பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலம் நாகலாபுரம் தலமாகும்.
வேதநாராயணப் பெருமாள் என்ற திருநாமம் கேட்ட உடனே வேதத்திற்கும் இத்தலத்திற்கு சம்பந்தம் உண்டு என்று தெரிகின்றது.
நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே!
நான்மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை.
காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே!
‘தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது.
அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றார் .
இந்த மச்ச அவதார நோக்கமே அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்ற
மஹா விஷ்ணு எடுத்த அவதாரமாகும் .
ஒரு யுகம் முடிவு அடைய போகும் கால கட்டத்தில் பிரம்மாவுக்கு உறக்கம் ஏற்பட்டது.
அவர் கண்களை மூடி வாயை திறந்து தூங்கும் போது அவர் வாயில் இருந்து வேதங்கள் வெளி வந்து விழுந்தன .
அவற்றை அசுரரான சோமகுரு என்ற அசுரன் அதை திருடி எடுத்து சென்றுவிட்டான் .
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மா மற்றும் தேவர்கள் இருந்தால் தான் புது யுகத்தை உருவாக்க முடியும் அதில் எல்லா உயிரினங்களை படைக்க முடியும் என்று கூறினார் .
மத்திய புராணத்தில் இந்த
மச்ச அவதாரத்தை பற்றி கூறியுள்ளார்கள்.
விஷ்ணுவின் பக்தரான சத்தியவரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில் பெரிய மீனாக உருவெடுத்தார் .
பகவான் தன் மச்ச அவதாரத்தின் மூலம் அசுரன் சோமகுருவை அழித்து வேதங்களை திரும்ப பெற்றார் . அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் .
பிரம்மா தன் படைக்கும் தொழிலால் ஒரு புதிய யுகத்தை உருவாக்கினார் .
முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம்.
இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று.
பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும்.
மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர்.
16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது.
மூலவர் வேதநாராயணப் பெருமாள்,ஸ்ரீதேவி-பூதேவி
யுடன் காட்சி தருகிறார்.
திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது.
இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம்.
இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான்
ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.
திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது.
இந்த ஆலயத்தின் கோபுரம் பார்க்கும் போதே நமக்கு
பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு
என பல்லாண்டு பாடத் தோன்றுகிறது ..
வேதநாராயணப் பெருமாள் கோவிலின் அறிவிப்பு பதாகை நம்மை வரவேற்கின்றது,
பெருமாள் மச்சாவதார கோலத்தில் அதுவும் சுயம்பு மூர்த்தமாக இவர் இருக்கும் அந்த அழகு இங்கே கிடைக்கும் தெய்வீக அதிர்வலையை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை.
பெருமாள் கோவிலில் சுற்று பிரகாரத்தில் சிவன் சந்நிதியை பார்ப்பது என்பது மிக, மிக அபூர்வம் இங்கே சுற்று பிரகாரத்தில் வீணா தக்ஷிணாமூர்த்தியை பார்க்கலாம்.
இந்த பெருமாளை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் முதலான பல தோஷங்கள் நீங்கும்.
இந்த கோவில் அனைத்து ராசியினரும் வழிபட வேண்டிய கோவில், குறிப்பாக மீன ராசியினர் அவசியம் வழிபட வேண்டும்.
இந்த கோயிலானது கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது ஆகும் .
இவ்வூரான நாகலாபுரம் என்ற பெயரானது தன் அம்மா பெயரான நாகமா என்ற பெயரை ஞாபகப்படுத்துமாறு வைத்தார் .
இக்கோயின் மற்றொரு சிறப்பு அம்சம் . இக்கோயில் மேற்கு அமைந்துள்ளது .சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 ,13 ,14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6 .15 மணி வரை இறைவனின் மீது படும் .அதுவும் முதல் நாள் சூரிய கதிர் இறைவனின் கால் பகுதியிலும் ,இரண்டாம் நாள் இறைவனின் மார்பு பகுதியிலும் ,மூன்றாம் நாள் இறைவனின் தலை பகுதியில் படும் .
இக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -12 .00 ,மாலை 4 .00 -8 .00
செல்லும் வழி:
இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 km தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது .சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது . சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 km தொலைவில் இக்கோயில் உள்ளது🌹🙏ஹனுமன் ஆர் கே சாமி💐🌹🙏
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான், ...
Comments
Post a Comment