*தெரிந்துக்கொள்வோம்*
🔯👍👍👍👍👍👍🔯
*மாசி மாத சிறப்புகள்*
*மாசி மாத பிறப்பு - 13.02.2022, ஞாயிற்றுக்கிழமை*
மாசி மாதத்தில் மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் *சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், *ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, *மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, *காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், *கடல் நீராட்டு* எனப்படும் நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன.
*திருமணம்* *கிரகப்பிரவேசம்* போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு இம்மாதம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
*சிவராத்திரி*
சிவராத்திரி இறைவனான சிவப்பரம்பொருளை நினைத்து ஆராதனை செய்து வழிபாடு நடத்த மிக உயர்ந்த நாளாகும். இவ்வழிபாடு மாசிமாதத்தில் அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசியில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நாளில் பகல் இரவு வேளைகளில் விரத முறையினை மேற்கொண்டு சிவபெருமானை குறித்த பாடல்கள் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
இவ்விரத முறையினை மேற்கொள்வதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி பிறவாமை என்கிற மோட்சம் கிடைப்பதாகக் கருதப்படுகிறது. *சிவராத்திரி நாளன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் குல தெய்வ வழிபாடு* மேற்கொள்ளப்படுகிறது.
*மாசி மகம்*
இவ்விழா மாசிமாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மக நட்சத்திரத்தில் நடத்தப்படுகின்றது. இவ்விழாவின் போது மக்கள் கடல், ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடுகின்றனர்.
கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியானது *தீர்த்தவாரி* என்றழைக்கப்படுகிறது.
புனிதநீராட்டு வழிபாடு மூலம் மக்கள் தங்களின் பாவங்கள் நீங்கப் பெறுவதாகவும், வாழ்வின் எல்லா வளங்களும் கிடைக்கப் பெறுவதாகவும் கருதுகின்றனர்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை *கும்பகோணத்தில் மகாமகம்* வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் *கும்பமேளா* என்ற பெயரில் நடைபெறுகிறது.
*ஹோலிப்பண்டிகை*
ஹோலிப்பண்டிகை மாசிமாதப் பௌர்ணமி தினத்தில் வடஇந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின் போது பலவண்ணப் பொடிகளை மக்கள் ஒருவர்மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியாக ஆடிப்பாடி மகிழ்வர்.
திருமாலின் பக்தனான பிரகலாதனை அவனின் தந்தை இரணிய கசிபு கொல்ல பலவழிகளில் முயன்றான். ஆனாலும் அவனால் பிரகலாதனை கொல்ல முடியவில்லை.
இந்நிலையில் தீயினால் அழிவில்லாத கொடிய குணம் படைத்த ஹோலிகா என்ற ராட்சசியின் மூலம் கொல்ல நினைத்தான். அதன்படி பிரகாலாதனை தன் மடியில் இருத்திக் கொண்டு தீயினுள் ஹோலிகா புகுந்தாள்.
அப்போது இறைவனின் திருவருளால் பிரகலாதனை தீ ஒன்றும் செய்யாது ஹோலிகாவை எரித்து சாம்பலாக்கியது. இந்நிகழ்ச்சி மாசிப் பௌர்ணமி அன்று நிகழ்ந்தது.
ஹோலிகாவின் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்ற மக்கள் பலவண்ணப் பொடிகளை தூவி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இது ஹோலிப்பண்டிகைக் கொண்டாடக் காரணமாகும்.
*மாசி சங்கடஹர சதுர்த்தி*
மாசியில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வழிபட எல்லா தோசங்களும் நீங்கி நற்பேற்றினைப் பெறலாம்.
*மாசிப்பௌர்ணமி*
மாசிப்பௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வின் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.
மாசிப்பௌர்ணமியில் தான் சிவபெருமானால் *மன்மதன் எரிக்கப்பட்டான்*. ரதி மன்மதன் நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது.
கிராமங்களில் காமான்டி என்றும் அழைக்கின்றனர்.
*புனித நீராடல்*
மாசிமாதத்தில் ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் அமிர்தம் இருப்பாதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மாசி மாதம் முழுவதும் கோவில்களைச் சார்ந்த நீர்நிலைகளில் புனித நீராடல் மேற்கொள்ளப்படுகிறது.
புனித நீராடல் மூலம் தங்களின் இப்பிறப்பு பாவங்கள் நீங்குவதாக மக்கள் கருதுகின்றனர். இம்மாதத்தில் காவிரியில் நீராடி சோமஸ்கந்த ஸ்தலங்களான ஐயர் மலை, கடம்பமலை, ஈங்கோய் மலை ஆகிய இடங்களை தரிசித்து வழிபாடு மேற்கொள்ள சிறந்தாகக் கருதப்படுகிறது.
*கலைமகள் வழிபாடு*
மாசிமாத வளர்பிறை (சுக்லபட்சம்) *பஞ்சமி* அன்று மணமுள்ள மலர்களால் கலைவாணியை அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்ள கல்வியில் சிறந்து விளங்கலாம்.
இம்மாதத்தில் புதுமனைப் புகுவிழாவினை மேற்கொண்டால் அந்த வீட்டில் நிறைய நாட்கள் சந்தோசமாக இருப்பர். அவர்களின் வசந்தம் வீசும்.
இம்மாதம் மந்திர உபதேசம் பெற, உபநயனம் செய்ய, கலைகளில் தேர்ச்சி பெற, புதிய கலைகளைக் கற்க இம்மாதம் சிறப்பு வாய்ந்தது.
மாசி மாதத்தினைச் சிறப்புறச் செய்தவர்கள்
குலசேகர ஆழ்வார்
காரி நாயனார், எறிபத்த நாயனார், கோசெங்கட்சோழ நாயனார் ஆகியோர்களின் குருபூஜை இம்மாதத்தில் நடைபெறுகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் இம்மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் தோன்றினார்.
மகத்துவங்கள் நிறைந்த மாசி மாதத்தின் விரதங்களை மேற்கொண்டு, இறைவனைப் போற்றி, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி, அத்துடன் அவரவர் *குலதெய்வங்களை* அனுதினமும் பிரார்த்தித்து, இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களும் ஆரோக்கியத்துடனும், செல்வவளத்துடனும், மனநிறைவான ஆனந்தத்துடனும் வாழ மனதார வேண்டிக்கொண்டு, இறையருள் கிடைக்கப் பெற்று வளமான வாழ்வு வாழ்வோம்.
நன்றிகள் பல!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
LN KRK
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான், ...
Comments
Post a Comment