கனகதாரா - பொன்மழை.
அஷ்டலட்சுமிகளில் ஒருத்தி. எட்டுக்கரங்கள் உடையவள். மேல் இருகைகளில் தாமரை மலர்கள்; அடுத்த இரு கைகளில் அம்பும் வில்லும்; அடுத்த இரு கைகளில் சக்கரமும் வலம்புரிச் சங்கும்; கீழ் வலக்கையில் பொன் நாணயங்கள் அடங்கிய பை. கீழ் இடக்கையால் வரத முத்திரை காட்டிக்கொண்டிருக்கிறாள்.
வருங்காலங்களில் குபேரனுக்குரிய நாள் நட்சத்திரம், சங்கரர் கனகதாராவைப் பாடிய நாள், வித்யாரண்யர் குருபூஜை, நிகமாந்த தேசிகர் குருபூஜை, கோடிகன்னிகாதானம் தாதாச்சாரியார் குருபூஜை என்றெல்லாம் கொண்டுவந்து அந்தந்த நாட்களிலும் தங்கம் வாங்கிப் பூஜையில் வைக்கச்சொல்வார்கள்.
சங்கரர், வித்யாரண்யர், நிகமாந்த தேசிகர், தாதாச்சாரியார் ஆகிய நால்வருக்காகவும் ஸ்ரீலட்சுமி பொன்னை மழையாகக் கொட்டச் செய்தாள்.
ஆதிசங்கரர் சிறுவராக இருக்கும்போது உஞ்சவிருத்தி எனப்படும் பிட்சாவிதி தர்மத்தை கடைபிடித்துவந்தார்.
ஒருநாளைக்கு ஒரு வீட்டின் முன் போய் நின்று, "பவதி பிக்ஷசூந்தேஹி" என்று சொல்லவேண்டும். ஏதாவது பிடுக்ஷ போட்டால் அதைமட்டுமே உண்ணவேண்டும். வேறெதையும் கேட்கக்கூடாது. ஒருவேளை மட்டும்தான். அந்த ஒருவேளையிலும்கூட மும்முறை மட்டுமே குரல் கொடுக்கவேண்டும். பிடுக்ஷ போடவில்லை யென்றால் அன்று பசியுடன் இருக்கவேண்டியதுதான். அவ்வாறு வீட்டின்முன்னால் சென்று குரல் கொடுத்தார்.
அந்த வீட்டுக்காரர்கள் பரம ஏழைகள். அன்று ஏகாதசி விரதம் முடித்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு, பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது. நெல்லிக்கனியை உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும்.
ஆதிசங்கரர் குரல் கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பிடுக்ஷயாகப் போடுவது என்று தெரியாமல் திகைத்தாள்.இரண்டு முறை குரல் கொடுத்தாகிவிட்டது.மூன்றாவது குரலுடன் போய்விடுவார். அப்படியாகினால் ஓர் இளம் சன்னியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும்.
ஆகவே நெல்லிக்கனியை ஸ்ரீ ஆதிசங்கரருக்குப் போட்டுவிட்டாள்.
இதனைக் கண்ட ஆதிசங்கரர், அந்தப் பெண்மணியின் நிலைமை குறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலட்சுமியிடம் வேண்டி 'கனகதாரா' என்னும் துதியைச் செய்தார்.
கனகதாரா ஸ்தோத்ரம்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:||
மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின் மார்பில் தவழும் மங்கல தேவதையான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் அழகு - அது அனைவருக்கும் ஐச்வர்யத்தை நல்குவது - எனக்கு மங்களம் தருவதாகுக !
2. முக்தா முஹ§:விதததீ வதனே முராரே:
ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி|
மாலா த்ருசோ:மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரீயம் திசது ஸாகரஸம்பவாயா:||
மலர்ந்து பரந்த உத்பல புஷ்பத்தில் தேன் வண்டு போல் முராரியான நாராயணனுடைய முகத்தில் ப்ரேமையுடனும், வெட்கத்துடனும் மெல்ல மெல்லப் போவதும் வருவதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண்தொடர் எனக்கு ஐச்வர்யத்தை கொடுக்கட்டும்.
3. விச்வாமரேந்த்ர பதவிப்ரம தானதக்ஷம்
ஆனந்த ஹேது ரதிகம் முரவித்விஷோபி|
ஈஷந்நிஷீதது மயி க்ஷண மீக்ஷணார்தம்
இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:||
எல்லா தேவர்களுக்கும் தலைமையான - இந்த பதவியை - கொடுக்க வல்லதும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுப்பதும், நீல ஆம்பல பூ போன்றதுமான லக்ஷ்மி தேவியின் அரைக்கண் பார்வை என்னிடம் நொடியாகிலும் நிலை பெறட்டுமே!
4. ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்||
ஆகேரஸ்தித கநீநிக பக்ஷநேத்ரம்
பூத்யை பவேத் மம புஜங்கசயாங்கநாயா:||
சற்றே மூடிய கண்களையுடயை முகுந்தனை மகிழ்ச்சியுடன் அடைந்து - (ஆனந்தத்தின் மூலகாரணமாயும் மறைவில்லாததுமான காம சாஸ்திரமயமாகியவர் அவர்) சற்று சாய்வாக நிற்கும் கருவிழியும், இமையும் கொண்ட லக்ஷ்மி தேவியின் கண் எனக்கு ஐச்வர்யத்தை பயக்கட்டும்.
5. பாஹ்வந்தரே மதுஜித:ச்ரித கௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி|
காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹதுமே கமலாலயாயா:||
மஹாவிஷ்ணுவின் கௌஸ்துபம் கொண்ட மார்பில் இந்திர நீல மணி ஹாரம் போல் விளங்குவதும், பகவானுக்கே காமத்தை கொடுப்பதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் தொடர் எனக்கு மங்களத்தை உண்டாக்கட்டும்.
6. காலாம்புதாலிலலிதோரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ|
மாது:ஸம்ஸ்தஜகதாம் மஹனீயமூர்த்தி:
பத்ரானி மே திசது பார்கவந்தனாயா:||
கைடபனை வதைத்த மஹாவிஷ்ணுவின் கரூநீல மேகம் போன்ற சீரிய மார்பில், மேகத்தின் மேல் விளங்கும் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதே ஜகன் மாதாவின் மேன்மை தங்கிய வடிவம், அது எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.
7. ப்ராப்தம் பதம் ப்ரதமத:கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதினி மன்மதே ந|
மய்யாபதேத் ததிஹ மந்தரமீக்ஷணார்தம்
மந்தாலஸ ம் ச மகராலய கன்காயா:||
பாற்கடலின் மகளான மஹாலக்ஷ்மியின் மேலான கடைக்கண் என்மேல் சிக்கெனப் பதியட்டும். அதன் வலிமையாலன்றோ மன்மதன், முதலில் மதுவரக்கனை வீழ்த்திய மஹாவிஷ்ணுவினிடத்தில் இடம் பெற்றான்.
8. தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்
அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|
துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்
நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:||
ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மியின் கடாக்ஷம் என்ற கார்மேகம் தயவு என்ற காற்றுத் துணையுடன், வெகு நாள் செய்த பாபமாகிய கோடையை நீக்கி பணமாகிய நீர்மழையை இந்த ஏழை சாதகக்குஞ்சின் மேல் பொழியட்டும்.
9. இஷ்டாவிசிஷ்டமதயோபி யயா தயார்த்ர -
த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸ§லபம் லபந்தே|
த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோகரதீப்திரிஷ்டாம்
புஷ்டீம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:||
சாதாரண புத்திமான்களும் தயைததும்பும் எந்தக்கண் பார்வையால் மூவுலகத்தலைமைப் பதவியை கூட சுலபமாக பெறுகின்றனரோ, அந்த மலர்ந்த தாமரை மலரையத்த பார்வை- தாமரைமலரில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மியின் பார்வை - என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்.
10. கீர்தேவதேதி கருடத்வஜஸ§ந்தரீதி
சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி|
சிருஷ்டிஸ்திதி ப்ரலய கேலிஷ§ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நம:த்ரிபுவணே குரோஸ் தருண்யை ||
மூன்று உலகங்களுக்கும் ஒரே நாயகரான பரமேச்வரனுக்கு உலகை ஆக்கவும், நிலைபெறச் செய்யவும் அழிக்கவும் ஆன விளையாட்டில் உடனிருக்கும் பத்நியாக ஸரஸ்வதீ எனவும், சாகம்பரீ எனவும், சந்திரசேகரரின்பிரியை எனவும் விளிக்கப்பட அவ்வன்னைக்கு நமஸ்காரம்.
11. ஸ்ரீ §த்யை நமோஸ்து சுபகர்மபலப்ரஸ¨த்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணர்ணவாயை||
சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை||
நாம் செய்த நற்செயல்களின் பயனைக் கொடுக்கும் சுருதி என்றறியப்படுபவளுக்கும், இணிய குணங்களுக்கு கடல் போன்றிருக்கும் ரதிக்கும், தாமரையை இருப்பிடமாஸகக் கொண்ட சக்திக்கும், புருஷோத்தமன் ப்ரியையான புஷ்டிக்கும் நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.
12. நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை|
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை||
தாமரை மலரொத்த முகமுடையவளும், பாற்கடலை பிறந்த இடமாகக் கொண்டவளும், சந்திரன், அமிர்தம் இவற்றின் சகோதரியாகவும் இருக்கிற ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.
13. ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனாநி
ஸாம்ராஜ்ய தான விபவானி ஸரோருஹா
த்வத்வந்தனாநி துரிதாஹரணோத்யதாநி
மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே||
ஹே!தாமரைபோல் கண்களை உடையவளே!செல்வம் கொழிப்பனவும், கரணங்களனைத்தையும் மகிழ்விப்பனவும் சக்ரவர்த்தி பதவியை நல்குவனவும், பாபங்களைப் போக்குபவனவுமான உன்னை வணங்கல்கள் என்னையே சாரட்டும்.
14. யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:|
ஸந்தநோதி வசனாங்க மானஸை:
த்வாம் முராரிஹ்ருதயேச்வரீம் பஜே||
எந்த அம்பிகையின் வழிபாடு, வழிபடுபவனுக்கு எல்லா வித செல்வங்களையும் நல்குமோ, அந்தவிஷ்ணு பத்னியை முக்கரணங்களாலும் சேவிக்கிறேன்.
15. ஸரஸிஜநிலயே ஸரோஜ ஹஸ்தே
தவல தமாம்சுக கந்த மால்யசோபே|
பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்||
தாமரைமலரில் வீற்றிருப்பவளே! கையில் தாமரையை கொண்டவளே!மிக வெண்மையான துகில், சந்தனம் மாலை இவற்றால் அழகியவளே!இனியவளே, மதிப்பிற்குரிய ஹரிப்ரியே!மூவலகிற்கும் ஐச்வர்யம் நல்குபவளே எனக்கு மனமுவந்து அருள்வாயாக!
16. திக்ஹஸ்திபி:கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹினீ விமல சாரு ஜலுப்லுதாங்கீம்|
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
லோகாதிநாத க்ருஹீணீ மம்ருதாப்திபுத்ரீம்||
திக்கஜங்கள், தங்கக்குடங்களின் வழியே பெருகச்செய்த ஆகாசகங்கை நீரால் நனைந்த உடலையுடையவளும், உலகனைத்திற்கும் தாய் ஆனவளும், உலக நாயகரான விஷ்ணு ப்ரியையானவளும், பாற்கடல் பெண்ணுமாகிய லக்ஷ்மி தேவியை வணங்குகிறேன்.
17. கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
கருணா பூரதரங்கிதை ரபாங்கை:|
அவலோகய மாமகிஞ்சனானாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:||
மஹாலக்ஷ்மி!மஹாவிஷ்ணுவின் பிரியே!நீ கருணை ததும்பும் கடாக்ஷங்களால், மிக ஏழையானவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டிய முதல் நபரான என் மேல் பார்த்தருள்வாயாக !
18. ஸ்துவந்த யே ஸ்துதிபிரமூபிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவன மாதரம் ரமாம்!
குணாதிகா குருதர பாக்ய பாஜினோ (பாஜனா)
பவந்தி தே புவி புதபாவிதாசாய:||
மூன்று வேதங்களே உருவான த்ரிலோகமாதாவும் லக்ஷ்மிதேவியை இந்தஸ் ஸ்தோரங்களால் தினந்தோறும் ஸ்தோத்ரம் செய்பவர் குணம் மிக்கவராயும், மிகப்பெரிய பேறு பெற்றவராயும், அறிஞர் போற்றும் கருத்து கொண்டவராயும் ஆவர்.
அந்தப் பாடலைப் பூர்த்தி செய்தபோது அங்கு பொன்மழையாகக் கொட்டியது.
Read somewhere and felt like sharing. A must read for females especially 👍 A few years ago, my friend had just crossed age 50. Just about 8 days later she was struck with an ailment ... And she died swiftly. In the group we received a condolence message that ..."Sad .. she is no more with us"... *RIP* 🙏 Two months later I called her husband. A thought crossed my mind ..he must be devastated as he had a travelling job. Till her death she would oversee everything.. home.. education of their children... Taking care of the aged in-laws.. their sickness.. managing relatives.. _*everything, everything, everything*_ She would express at times.." my house needs my time, .. my hubby cant even make coffee tea, my family needs me for everything, but no one cares or appreciates the efforts i put in. I feel they all take me for granted ". I called her husband to see if the family needed any support, as, i felt her hubby must be feel...
Comments
Post a Comment