இது ஒரு சொட்டுக் கண்ணீருக்காக கதை😭😭😭😭😭😭😭😭 ஒரு சிறிய கதை...படித்ததில் மனதை கவர்ந்தது: ★★★★★★★★★★★★★★★ ஓர் வார இறுதி விடுமுறைக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி. . அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. . அது ... வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. . தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். . ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு சிறப்புத்தன்மையும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! . அவனிடம் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார். எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார். . அவ்வாண்டிற்கான காலாண்டு பரிட்ஷை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன. . ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை சுமதிக்கு அழைப்பு விடுத்தார். அவர் வந்ததும், "முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!" என்று தியோடரின் முன்னேற்ற அறிக்கையை சுட்டிக் காட்டிக்கூறினார். . ஆசிரியை சுமதியோ "என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!" என்றார். தலைமை ஆசிரியர் அலுவலக ஊழியர் ஒருவரிடம் தியோடரின் கடந்த கால முன்னேற்ற அறிக்கைகளை கொண்டு வந்து சுமதியிடம் கொடுக்குமாறு பணித்தார். அறிக்கைகள் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி. மூன்றாம் வகுப்பு அறிக்கையில் 'வகுப்பின் மிகத்திறமையான மாணவன் தியோடர்' என இருந்ததைக் கண்டு தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சி அடைந்தார் சுமதி. நான்காம் வகுப்பு அறிக்கை சொன்னது. 'தியோடரின் தாய் புற்று நோய் முற்றிய நிலையில் உள்ளார். அதனால் தியோடர் மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ' ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, 'தியோடரின் தாயார் இறந்துவிட்டார். அவன் மேல் அக்கறை காட்டும் உறவு தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!' கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.' என்று ஓர் உறுதியோடு கூறினார். அடுத்த திங்கள் காலை ஆசிரியை சுமதி வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் தாம் பொய் சொல்கிறோம் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி எனும் தியோடர் மீது அவரது அன்பு அளவுகடந்திருந்தது. தியோடருனனான தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்வதென்று அவர் தீர்மானித்திருந்தார். . அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் தியோடரின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது. . அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள் வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அவற்றிற்குள் ஒரு பெட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதிக்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அந்தப் பொருள் தியோடருடையது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து தன் கையில் அணிந்துகொண்டார். மெல்லியதாய் ஒரு புன்னகையுடன் தியோடர் சொன்னான். "இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் வைத்திருந்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டிக்குள் வைக்கும்முன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!” ◆ ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. '' ‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்… ‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy. ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. ஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து... Mrs. Sumathi ‘I have seen many more people in my life. You are the best teacher I have ever seen’, Now I am going to get married. I cannot dream of my marriage without your presence. I am your Teddy. Dr. Theodore அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன. ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு திருமணத்திற்குப் புறப்பட்டார். அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ". திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர். ஆசிரியை சுமதி பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!'' . . *இக்கதையை படித்த மரியாதைக்குரிய ஆசிரியர்களே! உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்கமுடியும்! இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் / தந்தையாய் நுழைந்துபாருங்கள்! உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.* Dedicated to all teachers..👍🏻👍🏻👍🏻 படித்தபின் கண்கள் குளமானால் நம்மை பாதித்த எதாவது ஒரு ஆசிரியருக்கு அர்ப்பணிப்போம்

Comments

Popular posts from this blog