எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு?
கடவுளை வணங்குவதற்கு நாள் நட்சத்திரம் ஏன் பார்க்க வேண்டும்? எனினும் மாணவர்களுக்கு பள்ளியில் கால அட்டவணை இருப்பது போல உங்களது கேள்விக்கு பதிலாக அட்டவணை இதோ:ஞாயிறு - கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்கலாம்.
திங்கள் - சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல் களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.
செவ்வாய் - சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.
புதன் - பெருமாளை சேவிப்பது நன்மை தரும். துளசிமாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும்.
வியாழன் - நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான் களை ஆராதனை செய்ய உகந்த நாள் பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நன்மை தரும்.
வெள்ளி - மஹாலக்ஷ்மி வழிபாடு நன்மைதரும். கோபூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும்.
மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.
சனி - ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர் களை வணங்குவதற்கு உகந்த நாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள். விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.
காலசர்ப்ப தோஷம் நீக்கும் திருக்கோவில்
அடியேன் உரை
👇
*https://youtu.be/bgxIcCQELek*
👇
நம் ஆன்மீக சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்👇
*https://youtube.com/channel/UCXS8nEe-gFYeoiTMwhSn-lA*
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment