ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் பேரழிவின் போது, 1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர், ஜோ ஓ டோனல் என்பவராலேயே எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம். ஒரு ஜப்பானிய சிறுவன், உடல் தகனம் செய்யும் இடத்தில், இறந்த தனது சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையிலே நிற்கிறான். அழக்கூடாது என்ற வைராக்கியத்துடனே கண்ணீரைக் கட்டுப் படுத்த, தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால், வழியும் இரத்தமும் சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது. நீ பையில் சுமக்கும் சுமையை என்னிடம் கொடு என்று காவலர் ஒருவர் கேட்ட போது, ​ சுமப்பதற்கு கடினமாக உணர இது ஒன்றும் பொருளல்ல, என் சகோதரன், என்று சிறுவன் பதில் அளித்ததாக புகைப்படம் எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார். இன்றைக்கும் ஜப்பானில், இந்த புகைப்படமே வலிமையின் அடையாளமாகவே பயன்படுத்தப் படுகிறதாம். ஆம், எதை சுமக்குறோம் என்பதல்ல, அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதே மிக முக்கியம். பணம் - சொத்துக்களுக்காக உறவினரையும், உடன் இருப்பவரையும் ஏமாற்றும், இன்றைய தலைமுறைக்கும் இதில் கற்றுக் கொள்ள நிறைய பாடம் இருக்கிறது. ( வாட்ஸ் அப் பகிர்வு)

Comments

Post a Comment

Popular posts from this blog