25 மைக்ரோ கதைகள்: 1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை. -ஜெயா சிங்காரம் 2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான். - பிரபு பாலசுப்பிரமணியன் 3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் நடராஜ். -தனுஜா ஜெயராமன் 4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம். -சி.பி.செந்தில்குமார் 5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை! -கல்யாணி சேகர் 6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை! -கவிதா ஹரிஹரன் 7. ஒரு மெளனத்தின் அலறல்! சைலண்ட் மோடில் செல்போன்! -மன்னன் உசைன் 8. சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி "சமமா பிரிச்சுக்கலாம்'' என்றான். -ஆர்.திலகவதி ரவி 9. பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம். -அ.வேளாங்கண்ணி 10."டேய்! நீ இன்னொரு பையனை கட்டியிருந்தாலும் மனசு ஆறும்'' திட்டினார் பெண் ரோபோவுடன் வீட்டுக்கு வந்த மகனை! -ஸ்ரீவித்யா KM 11. அவன் அதிர்ஷ்டக்காரன்! மனைவி கிடைத்தாள் மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே! -தயா.ஜி.வெள்ளைரோஜா 12. ''பிள்ளை பெத்துக்கத் துப்பில்ல'' வீட்டில் திட்டு வங்கியவள் பால் கொடுத்தாள் யாரோ பெற்ற பிள்ளைக்கு. "கட்'' என்றார் இயக்குனர். -விஜி.முருகநாதன் 13. யானையின் வழித் தடத்தில் அமைந்த இருப்புப் பாதையில் விரைவு ரயில் வருகிறது. யானை மெதுவாகக் கட..க்..கி..ற..! -பழனீஸ்வரி தினகரன் 14. நாடுகளிக்கிடையில் பேச்சு வார்த்தை! மேஜைகளுக்கடியில் துப்பாக்கிகள்! -முரளி, மதுரை 15. "பேய்களில் நம்பிக்கையில்லை'' என்றான் சுடுகாட்டில். கல்லறைக்குள்ளிருந்து சிரிப்புச் சத்தம்! -ரெஜி தரகன் 16. நடிக்க வந்த குழந்தைக்கு கேரவனில் நடிகை பால் கொடுத்தாள். குழந்தை சிரித்தது. மார்பில் வலி குறைந்தது. -செல்லம் ஜெரினா 17. 'ஒரு ஊரில்' என்று ஆரம்பித்தார் தாத்தா. 'சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்கிறான் பேரன். -இயக்குனர் ஹரி கணேஷ் 18. "விட்டுடு தம்பி!'' என்று கதறிய பெண்ணை விட்டுவிட்டு நகர்ந்தான் அனாதை கொள்ளையன். -குமரன் கருப்பையா 19. "Good morning. We are calling from tamil sangam!'' - அப்துல் ரஷீது 20. ஊருக்கே உணவு கொடுத்தான் கொள்ளைப் பசியுடன் ஸ்விக்கி டெலிவரி பையன். -ஜே.குமார் ராம் 21. வாசலில் பசியென்ற பிச்சைக்காரனை விரட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றார் அன்னதானம் செய்ய! -லக்‌ஷ்மன் மோகனசந்திரன் 22.ஆம்புலன்சுக்கு போன் செய்யச்சொல்லி அழுதது குழந்தை- மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக! -எஸ்.எஸ்.பூங்கதிர் 23. மாமியாருக்குப் பிடித்த எல்லாவற்றையும் சமைத்தாள் மருமகள் - திதிக்காக! -ஸ்ரீதேவி மோகன் 24. இன்றுடன் உலகம் அழிகிறது! முழு விபரம் நாளைய நாளேட்டில்! -ராம் சின்னப்பயல் 25. ஸாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தில் அரசியல்வாதி வைத்தார் கைநாட்டு! -கருணாகரன்

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips