நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன். மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர். தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தன்னை அந்த ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் விரைவான மற்றும் சிறந்த சேவை... பிச்சை எடுப்பது போல் காத்திருக்க தேவையில்லை என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை கேன்ஸல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன். வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார். சார் உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அதை எங்கள் தலைமை செஃப் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்குத் தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. எனவே உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார் என்றார். நான் அமைதி ஆனேன் பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 வெயிட்டர்ஸ் எனக்கு பறிமாறினார்கள். மிகவும் சுவையான உணவு நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார். அவர் என் பள்ளி நண்பர். அவர் என்னை ஆச்சரியப்படுத்த விரும்பினார். எனது எளிய உணவை பணக்கார உணவாக மாற்றி, எனக்கு ராயல் ட்ரீட் கொடுக்குமாறு சமையலறைக்கு அறிவுறுத்தினார். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள் அது தான் #வாழ்க்கை. சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள். உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே. அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்... கவலை கொள்ளாதீர்கள்... கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை தலைமை சமையல்காரர் கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும். பொறுமையாக நம் கடமைகளை சரி வர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள். ஆசீர்வதிக்கப்பட்ட உங்கள் நாளை அப்போது அனுபவிக்கவும். நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாராலும் தடுக்க முடியாது....

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips