ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான்.
தியானம் என்றால் என்ன?
சிரித்துக் கொண்டே அந்தச்சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.
சிறுவனிடம் "நான் எப்போ *'ம்'* சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும்
அதே மாதிரி.....எப்போ *'ம்'* சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே..
சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக்கோ ஒரே குழப்பம்.
சிறுவன் மகரிஷியின் *'ம்'* க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான்.
சிறுவனை சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் *'ம்'* சொன்னார் ரமணர்.
அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது *'ம்'* வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய, பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாக திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தை கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.
ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாரே ஒழிய *'ம்'* சொல்வதாக இல்லை.
தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது.
சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா *'ம்'* சொல்லுவார் என்று காத்திருந்தான்.
சுற்றியுள்ளவர்களுக்கும் என்ன தான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.
எதிர்பாராத ஒரு நொடியில் *'ம்'* சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.
ரமணர் புன்னகைத்தபடி
*"இரண்டு 'ம்' - களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும், என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும், அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்து இருப்பாயானால் அதன் பெயர் தியானம்..... புரிந்ததா இப்போ?"* என்றார் மகரிஷி புன்னகைத்தபடி.
*ரமணர் சொன்ன அந்த.....*
*இரண்டு 'ம்' கள்*
1. *வாழ்வு'ம்',*
2. *சாவு'ம்'*
அப்பா ஒரு வரம்
அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம். மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். ‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார். ‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு. ‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள். ‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு. ‘அப்ப...
Comments
Post a Comment