வேல் என்பது Delta Cancri என்ற நட்சத்திர உருவமா? நம் முன்னோர்களின் வானியல் சாதனையை பாரீர்! தைப் பூச வரலாறை அறிவியல் மற்றும் மெய்ஞானத்தோடு கூறுகிறேன் கேளீர்! 20ஆம் நூற்றாண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நட்சத்திரத்தை தமிழர்கள் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேலாக வடிவமைத்துவிட்டனர். இது தான் இந்து தர்மம் போதிக்கும் மெய்ஞானமாகும். இங்கே காரணம் காரியமின்றி எந்த விழாவும் கொண்டாடப்படுவதில்லை. தைப் பூசம் வரலாறு சுருக்கமாக: உமையாள் பழனியில் ஆண்டி கோலத்தில் இருந்த முருகப் பெருமானுக்கு அசூரர்களை அழிக்க ஞானவேல் வழங்கியது இத்திருநாளில் தான். இதை வைத்து தான் திருச்சீரலைவாயிலில் (திருச்செந்தூர்) அசுரர்களை சம்காரம் செய்தார். அறிவியலும் எமது சமயமும்: பூசத்திற்கு அறிவியல் பெயர் என்பது Delta Cancri என்பதாகும். இது இரு நட்சத்திரங்களாக அதாவது அஸலிஸ் (ஆல்ஃபா), ஆஸ்ட்ரலிஸ் (பீட்டா) காணப்படுகிறது. இது வேல் வடிவிலான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாத இறுதியில் இருந்து பிப்ரவரி இறுதிவரை இரவு நேரங்களில் வானில் தெளிவாகக் காணலாம். 180 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் இம்மாதங்களில் மட்டுமே பூமிக்கு வெளிப்படும். அண்டக்கதிர் (Cosmic Rays): பூமியின் காஸ்மிக் வட்டத்திற்கு வரும் இந்த நட்சத்திரத்தின் கதிரலைகள் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு புத்துணர்வைத் தந்து மந்த நிலையை போக்கும். இதனால் பூலோக உயிரினங்கள் நன்றாக சிந்திக்கும் ஆற்றலைப் பெறும். இது வானியல் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பாகும். அறிவியலும் மெய்ஞானமும்: எந்த ஒரு குழந்தைக்கும் தாய் தந்தையிடம் இருந்து தான் ஞான சக்தி கிடைக்கும். அதை வைத்து தான் அக்குழந்தை தனது வாழ்நாளில் வெற்றி அடையும். முருகப் பெருமானுக்குக் கிடைத்த ஞான வேலும் அவ்வாறு தான். Delta Cancri என்னும் நட்சத்திரமும் அவ்வாறு தான். Cancri (Cancer, கடகம்) என்னும் தாய் அமைப்பில் இருந்து அந்த சக்தியை பெறுகிறது. இந்த பூசம் தினத்தன்று தான் கந்தன் தனது தாயிடம் இருந்து ஞானவேல் பெற்று அசுரர்களை வதம் செய்தார். பூசம் நட்சத்திரம் பூமியில் வெளிப்படுவது ஜனவரி மாத இறுதியில் இருந்து பிப்ரவரிமாத இறுதி வரை தான். Delta Cancri என்னும் நட்சத்திரம் பூமியில் வெளிப்படுவது ஜனவரி மாத இறுதியில் இருந்து பிப்ரவரி மாத இறுதி வரை தான். வேலின் வடிவம் ஞான வடிவானதாகும். அதன் பெயரே ஞானவேல், வெற்றி வேல் தான். Delta Cancri வடிவமும் வேல் வடிவம் தான். அதன் அண்டக்கதிர்கள் பூலோக உயிர்களுக்கு புத்துணர்வை ஊட்டி ஞானத்தை அழிக்கிறது. சும்மா போகிற போக்கில் தமிழர்களால் வேல் உருவாக்கப்படவில்லை, அது ஒரு நட்சத்திரத்தின் வடிவமாகும். 180 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை எந்த ஒரு அறிவியல் உபகரணமும் இல்லாமல் வேலாக வடிவமைத்த நம் சித்தர்களின் ஆற்றலை என்னவென்று கூறுவது! ஞான வேல் முருகனுக்கு அரோகரா!

Comments

Popular posts from this blog

Planning Tips for Pongal - Beginners Tips