*நாளை*(15-5-2022)
*ஞாயிற்றுக்கிழமை சுபகிருது* *வைகாசி 1 சதுர்த்தசி திதியுடன்* *கூடிய வாழ்வை வளமாக்கும்* *விஷ்ணுபதி புண்ணிய காலத்தை*
*தவற விட்டு விடாதீர்கள்!
உங்கள் வாழ்க்கையில்
கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?
நாளைய விஷ்ணுபதி
புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும்
வழிபடுங்கள்
விஷ்ணுபதி புண்ய காலமானது வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களில் முதல் தேதியில் வரும்.
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதங்களாக கருதப்படுகிறது.
விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம் எனப்படும்
ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர கூடியது இந்த விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும்.
மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள்வருவது உண்டு.
விஷ்ணுவுக்குரிய மாதங்களான மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை மாதங்கள் பிறக்கும் தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த விஷ்ணுபதி புண்ய காலநேரம் அமைகிகிறது.
முழுமையாக 9 மணி நேரம் இந்த விஷ்ணுபதி புண்யகாலம் அமைந்து இருக்கும்.
நாளை(15-5-2022) வைகாசி மாதம் பிறக்கும் நாளில் அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை முழுமையாக 9 மணி நேரம்
இந்த விஷ்ணுபதி புண்ய கால
நேரம் அமைகிகிறது.
இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தில் நாம் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும்
மனதார வழிபட்டு நமது எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும்
கூறி பிரார்த்தனை புரியலாம்.
நாளை உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மரத்தை நமஸ்காரம் செய்து 27 உதிரி பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன்பாக வையுங்கள்.
27 சுற்று முடித்த பின்பு
மீண்டும் கொடிமரத்தை
நமஸ்காரம் செய்யுங்கள்
பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு உங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள்
உங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த ஆவணி, கார்த்திகை மாசி மாதங்களில் முதல் தேதி வரும் மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்,நிறைவேறியே தீரும்
மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த விஷணுபதி புண்ய கால நாள் அமைந்து உள்ளது...
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெற நாளைய விஷ்ணுபதி புண்ய காலத்தை நல்லபடியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
Comments
Post a Comment