பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள் பேத்தி.
திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது.
பாட்டி, பேத்தியிடம், அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது.
அண்டாவை முற்றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி..." என்றாள்.
போ... பாட்டி" என மறுத்தாள் பேத்தி.
அடியே, அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா.....??? போய் அண்டாவைக் கொண்டு வந்து அப்படியே வை..." என உத்தரவிட் டாள் பாட்டி.
வெறுப்பாய் ஓடி, பாட்டி சொன்னதைச் செய்துவிட்டுத் திரும்பினாள் பேத்தி. அரை மணி நேரம் மழை கொட்டியது!
இந்நேரம் அண்டா நிரம்பி இருக்கும் என ஆனந்தமடைந்த பாட்டி, திண்ணையை விட்டு முற்றத்துக்கு எழுந்து போனாள்.
பகீர் என்று ஆனது பாட்டிக்கு.
அண்டாவில் ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை.
‘அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வை’ என்று பாட்டி சொன்னதை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த அண்டாவை கவிழ்த்த வண்ணமே மழையில் வைத்து விட்டாள் பேத்தி.
மழை என்னவோ வஞ்சனை இன்றிதான் பெய்தது.
பாத்திரம்தான் கவிழ்ந்து கொண்டு தண்ணீரை ஏற்க மறுத்து விட்டது.
கடவுளின் அருளும் அப்படித்தான்.....!!!
அது பொதுவாகவே அனைவருக்கும் கொட்டுகிறது.
கவிழ்த்து வைத்தவர்களின் மனங்கள் அதில் ஒரு சொட்டுகூட ஏந்துவதில்லை.
திறந்த மனத்தோடு, பிரபஞ்சத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டால் பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமானவையே....!!!
- சுகி.சிவம் எழுதியதிலிருந்து.......!!!
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான்,
Comments
Post a Comment