சிறுகதை.
வானப்ரஸ்தம்.
by சுந்தர மணிவண்ணன்.
ஆட்டோவை நிறுத்தி,எதிரில் வந்தவரிடம், விசிட்டிங் கார்டை நீட்டினார் ட்ரைவர்..
"டாக்டர் கோபாலன் வீடா சார்".......நேர்ர்ர போய்,ரைட்ல திரும்பி,மறுபடியும் லெஃப்ட்ல திரும்பி என்று, முற்றுப் புள்ளி இல்லாமல் சொல்லிக் கொண்டே போனார், அந்த ஆசாமி.
சலித்துப் போன, டிரைவர்,
O.k. நாங்க பார்த்துக்கிறோம் சார்" என்று
வண்டியை வேகமாக எடுத்தார்.லெஃப்ட்,ரைட் என்று வண்டியை உருட்டி, ஒரு டெட்(Dead) எண்டில் நிறுத்தி,
அந்த விலாசத்தைக் காட்டி "சார் இந்த வீட்டுக்குப் போகணும்"
" நீங்க இந்தப்பக்கம் தப்பா வந்துட்டீங்க. ரிவர்ஸ்ல போய், லெஃப்ட்ல திரும்பினா, முதல் வீடு தான் சார்,
அந்த வீடு" என்றார் அவர்.
அந்த முதல் வீட்டின் இரு கேட்டுகளும், இழுத்துப் பூட்டப்பட்டிருந்தன.
அந்த வீட்டு வாசலில் நின்றிருந்தவரிடம்,
"வீடு பூட்டியிருக்கே.டாக்டர் ஊரில் இல்லையா?
"நம்ப ஓஸி டாக்டர்ர ஊர்ல கொஞ்ச நாளா காணல .வீடு ரெண்டு மாஸ மா பூட்டிக்கிடக்கு.பக்கத்து வீட்ல வேணா கேட்டுப்பாருங்க சார்."
சொல்லிவிட்டு அவர் நகர்ந்தார்.
பக்கத்து வீட்டுக் கதவை தட்ட.
வயஸான தம்பதியர் கதவை திறந்து,"யார் நீங்க?" என்று என்னை வினவினர்.
" டாக்டர் கோபாலனை பார்க்க வந்தேன்.வீடு பூட்டி கிடக்கு.
எங்க போயிருக்கார்.ஏதாவது தெரியுமா"
"அவர் வீட்ட வித்துட்டு எங்கோ வெளியூருக்கு போயிட்டார்.எங்க போனார்னு எங்களுக்குத் தெரியல சார்".
வீட்ட வித்துட்டு வெளியூருக்கு போயிட்டாரா?
எனக்கு குழப்பமாயிருந்தது.
எப்பவும் அந்த வீடு, பேஷண்டுகளால் நிறைந்து காணப்படும்.
ஹோமியோபதி மருத்துவம்.கல்கத்தாவில் வசிக்கும்போது, ஒரு இன்ட்ரஸ்ட்ல, தானே கத்துக்கிட்டேன்னு சொல்லுவார்.நிறைய பேர் அவரைத் தேடி வருவாங்க. சின்ன சின்ன நோயெல்லாம் சீக்கிரமே குணப்படுத்திடுவார். அவரைஅறிஞ்சவங்க,அக்கம் பக்கத்தில் இருப்பவங்க என, எல்லாரும் இவரைத்தான் தேடி வருவாங்க.
"கைராசிக் காரர்". அப்படி ஒரு பட்டமும் அவருக்கு உண்டு.வயசானவர். நல்ல அனுபவசாலி.
ஏழை, பணக்காரன்னு, எல்லாரும் வருவாங்க..யாரிடமும் ஃபீஸ்னு கை நீட்டி பைஸா வாங்க மாட்டார்.மருந்துக்கு,அதன் அடக்க விலையை மட்டுமே கேட்டுப் பெறுவார். இல்லாதவங்க கிட்ட அதுவும் கேட்க மாட்டார்.
இஷ்டம் உள்ளவங்க,அவர் எதிரில் இருக்கும் சின்ன உண்டியல்ல, ஏதாவது பைஸா போடுவாங்க.
ஏதோ ஒரு ஆர்ஃபனேஜ் ஸ்டிக்கர் அதன்மீது ஒட்டப்பட்டிருக்கும்.அதில் போடும் பணம், சிந்தாமல் சிதறாமல் அந்த ஆர்ஃபனேஜுக்கு போய் சேர்ந்து விடும், என்பதை உறுதி செய்வது போல்,
"உங்கள் உதவி ஒரு திக்கற்ற குழந்தையை கை தூக்கி விட உதவும்".
Bold letterல் இந்த வாசகம், அந்த உண்டியல் மேல் ஒட்டப்பட்டிருக்கும்.
இதை அவர் ஒரு சர்வீஸ் மைண்டோடு செய்கிறார்.
குப்பி குப்பியா, அடுக்கி வச்சிருப்பாரு.ஜவ்வரிசி சைஸ்ல, வெள்ள கலர்ல்ல, மாத்திரைகள் இருக்கும்.
ஒரு குப்பியில இருக்கிறத, சாப்பாட்டுக்கு முன்பும், இன்னொரு குப்பியில இருக்கிறத, சாப்பாட்டுக்கு பின்பும்னு, சாப்பிடச் சொல்லுவார்.
மாத்திரை மாறிப்போகாம இருக்க, ஒன்று, இரண்டு ன்னு குப்பி மேல் மார்க்கும் பண்ணித் தருவார்.
இது என்ன? எல்லா வியாதிக்கும் ஒரே குப்பி. ஓரே மாத்திரை. ஜவ்வரிசி சைஸுல, வெள்ள கலர்ல்ல.
எல்லோரும் நம்பிக்கையாதான் சொன்னாங்க.
எனக்கு மட்டும் ஏனோ நம்பிக்கை இல்லை.இருந்தும் அவரை அணுகினேன்.
கணுக்காலில் அக்யூட் பெயின்.அடிக்கடி வீக்கம் வரும்.
அல்லோபதி,ஆயுர்வேதம் னு ஒரு ரவுண்ட் அடிச்சு,இந்த வியாதிக்கு குணமே இல்லைங்கிற முடிவுக்கு வந்தப்பத்தான்
இவரைத் தேடி வந்தேன்.
"வெரி சிம்பிள்மேன்.கைராசிக்காரர்.பாபாவின் அருள் அவருக்கு நிறைய உண்டு. உங்க வியாதியை குணப்படுத்திடுவார்". சென்டிமெண்டையும் தொட்டு, நிறைய நம்பிக்கையோடு, சொல்லி அனுப்பினார் என் நண்பர்.
"என்ன பிரச்சினை?" டாக்டர் கோபாலன் என்னைக் கேட்டார்.
சார்! கணுக்கால் வலி.எதனால வந்ததுன்னே தெரியல்ல.அப்பப்ப அந்த இடத்தில கொஞ்சம் வீக்கமும் வருது.அல்லோபதி, ஆயுர்வேதம்னு எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டன்.எதிலையும் குணம் தெரியல்ல சார்.
"காலை கொஞ்சம் காட்டுங்கோ.எங்க வலிக்குது".
கணுக்காலைத் தொட்டுக் காண்பித்தேன்.சுற்றி கொஞ்சம் வீக்கமும் இருந்தது.
டாக்டர் காலை தொட்டோ, அழுத்தியோ, பார்க்கவில்லை.கண்ணால் மட்டுமே பார்த்தார்.
"இப்ப ரெண்டு மாஸத்திற்கு மருந்து தரேன்.
ஆறு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடணும்.சரியா?"
அவர் சொன்னபடி மாஸா, மாஸம் இப்ரூவ்மண்ட் தெரியத் தொடங்கியது.ஆறுமாஸம் கழிச்சு வீக்கமும் வலியும் அடியோடு காணாமல் போயிடுச்சு..
டாக்டரைப் பார்த்து நன்றி சொல்லத்தான், இன்னிக்கு, இங்க வந்தேன்.
"எதனால திடீர்னு இப்படி ஒரு முடிவெடுத்தார்". பக்கத்து வீட்டுக்காரரிடம் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தேன்.
"அவரும் அவுங்க ஒய்ஃபும் தனியா தான் இருந்தாங்க.அவுங்களக்கு குழந்தை பிறக்கல".
"ரெண்டு பேருக்குமே, சோஷியல் சர்வீஸ் மைண்ட் உண்டு".
"சார் ஒரு பென்ஷனர்.இந்த ஏரியாவில் சத் சங்க ஆக்டிவிடியிலே அதிக ஈடுபாடு. ரெண்டு பேருமே இணைஞ்சு ஈடுபடுவாங்க".
வருஷா வருஷம் ராதா கல்யாண வைபவம்.ராமமூரத்தி பாகவதர் கோஷ்டி.அதி அற்புதமா நடத்துவார்.
ஏரியாவில் இருக்கிற எல்லோரையும் இன்வைட் பண்ணுவார்.
யார் கிட்டேயும் காசு வாங்க மாட்டார்.
அந்த அம்மாதான் அவ்வளவு பொறுப்பா எல்லாத்தையும் நடத்துவாங்க.
கொஞ்ச நாட்களுக்கு முன் அந்த அம்மாவுக்கு மார்பக புற்று நோய் வந்ததாச் சொன்னாங்க.
வயசான காலத்தில அவங்க ஆபரேஷனுக்கு ஒத்துக்கல.கடைசி காலத்துல கீமோ தெராஃபி கஷ்டமெல்லாம் வேண்டாம்.நம்ப ஹோமியோபதியிலேயே ட்ரை பண்ணலாம்னு முடிவு செஞ்சாங்களாம்.
ஆனால் பலன் ஏதுமில்லை .அவரை விட்டுட்டு போயிட்டாங்க.
கல கலன்னு இருந்த வீடு. இப்படியாயிடுச்சு.
அவர் எங்கு போனார்? எப்படி கண்டு பிடிப்பது என்ற ஆழ்ந்த சிந்தனையோடு அந்த வீட்டை விட்டு இறங்கி வரும்போது
அந்த பூட்டிய வீட்டின் கேட்டை திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
யாரோ ஒருவர் துரு ஏறிய பூட்டோடு போராடிக் கொண்டிருந்தார்.
"சார் இந்த வீடு"என்று நான் தொடங்குவதற்குள்
"இந்த வீடு ஒரு ஆர்ஃபனேஜ் ஹோம் க்கு சொந்தம்.யாரோ ஒரு பெரியவர் தானம் பண்ணிக் கொடுத்துட்டார்".
"அந்த பெரியவர் எங்க போனார் தெரயுங்களா?.நான் அந்த பெரியவரிடம் தான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன்".
"அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாதுங்க".
"அவர் திருவண்ணாமலைக்கு போய்விட்டதா சொன்னாங்க"
திருவண்ணாமலை யா? எதுக்கு போயிருப்பார்.எனக்கு எதுவும் புரியல.
"திருவண்ணாமலை யில எங்க தங்கி இருக்கார்.அந்த தகவல் ஏதாவது தெரியுமா?".
"எனக்கு எதுவும் தெரியாதுங்க.மன சாந்திக்காக,
மலை அடி வாரத்துல தங்கி இருக்கிறதா, சொன்னாங்க".
மலை அடிவாரத்தில்ன்னா? ரமண மஹரிஷி ஆஸ்ரமத்திலா?
இல்லை விசிறி சாமியார் மடத்திலா.?
திருவண்ணாமலை எங்கும் தேடலானேன்.
ரமண மஹ ரிஷி ஆஸ்ரமத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த ஒவ்வொரு தலையாய்த் தேடினேன்.
அருகில் உள்ள விசிறி சாமியார் மடத்துக்கும் போனேன்.
மலை அடிவாரத்தில்,கிரி வலப்பாதையில், என, எல்லா இடங்களையும் தேடித் தேடிச் சுற்றினேன்.
நம்பிக்கையில் அனுமாரையும் மிஞ்சி, ஒரு மரத்தடியில் நாலைந்து சாதுக்களோடு
இருந்த டாக்டர் கோபாலனை, கண்டு புடிச்சேன்..
தூரத்தில் நின்று கொண்டே அவரைக் கவனித்தேன்.
ஆன்மீக உரையா? இல்லை ஏதாவது தியானமா?
எதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
அங்கிருந்த சாதுக்களில் ஒருத்தர் தன் தலையை அழுத்தி, கோபாலனிடம் ஏதோ கேட்டார்.
தூரத்தில் இருந்த எனக்கு என்ன கேட்கிறார் என்று புரியவில்லை.
கோபாலன் தன் தோளில் தொங்கிய ஜோல்னா பையிலிருந்து, ஒரு குப்பியை எடுத்து அந்த சாதுவிடம் கொடுத்து, ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
அதே குப்பி. ஜவ்வரிசி சைசு, வெள்ளை நிற மாத்திரை.
உடனே புரிந்து கொண்டேன்.சாது ஜனங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனாலும் சாமியாராக வில்லை.
அதே மருத்துவத் தொண்டு.அதே அமைதி.
அருகில் இருந்தவர் பேசுவது என் காதில் விழுந்தது.
"வசதியாதான் வாழ்ந்தாராம்.எல்லாத்தையும் தானம் பண்ணிட்டு, கோயில் முன்னாடி போய் நின்று யாரு என்ன கொடுக்கிறாங்களோ அதை வாங்கிச் சாப்பிட்டுட்டு,,இந்த மரத்தடியில் வந்து தங்கிடராரு.
மழை, காத்துன்னா அக்கம் பக்கத்தில் இருக்கிற கட்டிடத்தின் ஓரத்தில சாதுக்களோட ஒரு மனுஷனா ஒட்டிக்கு வாராம்".
"கூட இருக்கிற சாதுக்களுக்கு மருத்துவ உதவி செஞ்சுண்டு, திருவண்ணாமலையில இவரு கொஞ்சம் வித்யாசமா தான் இருக்காரு".
Detached attachment. அவர் சாமியாராக வில்லை. சாமானியராகவே வாழுகிறார்.
"வானப்ரஸ்தம் என்பது ஒரு வகை துறவு.இது வரை செய்து வந்த உலகியல் சார்ந்த விஷயங்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு,
தன் மன நிறைவுக்குரிய செயல்களை மட்டுமே செய்து வாழ்தல்".
ஜெய மோகனின் இந்த வரிகள் என் நினைவில் வர, அவர் கண்களில் படாமல்,என் கைகளை கூப்பி நகர்ந்தேன்.
நான் வேலைக்கு சென்ற காலத்தில், ஒரு நாள் என் சக அதிகாரியுடன், என் மேல் அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, என் சக அதிகாரி சொன்னார், "ஸார், உங்க இரண்டு பேருக்கும் இரண்டு ஆம்பள பசங்க. கவலை இல்லை. எனக்கு இரண்டும் பொண்ணுகளா போச்சி" என்றார். அதற்கு என் உயர் அதிகாரி " வயதான காலத்தில், பையன் வீட்டுக்குப் போனால், எப்ப மருமக காஃபி கொடுப்பா, எப்ப டிபன் சாப்பிட கூப்பிட்டுவா, எப்ப சாப்பாடு போடுவான்னு சமயல் கட்டையே பார்த்துகிட்டே இருக்கனும். அதே, பொண்ணு வீட்டுக்குப் போனா, உரிமையா, சமயல் கட்டுக்குள்ளே போய், பசிக்குது , சாப்பிட எதாவது குடுன்னு கேட்கலாம்" என்று பதிலளித்தார். ஞாயமாகத் தான் எனக்குப் பட்டது அன்று. இன்று? நேற்று பெசண்ட்நகர் பீச்சில், வாக்கிங் போய் விட்டு, அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தேன். என் அருகில் இரண்டு பெண்மணிகள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அதன் சாரம்சம் கீழ் வருமாறு: ஒரு பெண்மணிக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரும், திருமணம் முடித்து, ஒரு பெண் ஆஸ்திரேலியாவிலும், அடுத்த பெண் அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். "இப்பத்தான்,
Comments
Post a Comment