Posts

கொரோனா - கவனமா இருங்க!

இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ... 🔴 சிகப்பில் இருந்தாலும் சரி... 🟠 ஆரஞ்சில் இருந்தாலும் சரி... 🟢 பச்சையில் இருந்தாலும் சரி... 🏢 கடைகள் திறந்தாலும் சரி... திறக்கப்படாவிட்டாலும் சரி... 🔔 ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி... 🔕 தளராவிட்டாலும் சரி... 🚷 ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி... 🚸 தடுக்காவிட்டாலும் சரி... 📢அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி... 📣 போடாவிட்டாலும் சரி... 🔈 மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி... 🔇 பேசாவிட்டாலும் சரி... 👨‍👩‍👦‍👦 *ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்...* உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது... 🌐 இது ஒரு #Pandemic - உலகளாவிய கிருமி பரவல்... ⚠ நீண்ட காலம் இருக்கும். பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்... 💅 அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு விசயமே இல்லை என்ற நிலைக்கு வந்து பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்... 👨‍👩‍👧‍👧👨‍👨‍👧‍👦🧕👲👨‍🎤🧟‍♂ கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்... 🚶‍♂ லிஃப்டில் கூட்டம்

இட்லி கவிதை

யாரோ எழுதிய கவிதை. க(வி) தாநாயகி நம்ம "இட்லி".😀 *இட்லிக்கு ஒரு கவிதை* அன்னை ஊட்டிய அமிர்தம் நீ காலையில் வரும் பௌர்ணமி நிலவு நீ! வெண் பஞ்சு மேகம் போல வந்த அமுதம் நீ! தாய் பால் நின்ற பிறகு தாயாய் நின்ற உணவு நீ மனைவியின் கை பட்டதால் மல்லிகை பூ நீ! தேங்காய் சட்னி உடன் வந்தால் தேவாமிர்தம் நீ! தக்காளி சட்னி உடன் வந்தால் தங்கம் நீ! புதினா சட்னி உடன் வந்தால் பசுமை பூ நீ! சாம்பார் உடன் சேர்ந்ததால் சாகாவரம் பெற்றாய் நீ! யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் வெற்றி பெறும் சிறந்த நட்பு நீ! மருத்துவர் பரிந்துரைக்கும் மகத்தான மருந்து உணவு நீ! எப்போதும் தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீ! *Epilogue* : மந்தாரை இலையில் உன்னை மணக்கும் நல்லெண்ணையில் குழைத்த மிளகாய்ப்பொடியாலே முழுவதும் போர்த்தி விட்டு எட்டு மணிநேரம் உறங்கவைத்து எழுப்பினால் ஓடும் ரயிலில் அனைவரின் கவனமும் உன்மேல் தான் இரண்டுநாள் பிரயாணம் என்றாலும் நீதானே எங்கள் வ(யிற்றிற்குத்)ழித்துணை 😀 ! Source: Whatsapp Forward

காஞ்சி பெரியவர் அனுக்கிரகம்!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ! பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை! அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண்

புத்தர் கதை - யாருக்கு சொந்தம்!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *💗சிந்தனை கதை...* *ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்..!!* ஒருநாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான். அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார். பின்னாலேயே வந்து திட்டி ஓயந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் இருந்தது. என்ன மனிதனிவர் என்று வியந்தவன் "ஏனய்யா இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான். கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?" "கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன். "ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான். மற்றவர்கள் தருவதை எல்லாம்

கர்மவினை

மஹாபாரதப் போரின் முடிவில் தனது நூறு புத்திரர்களையும் பறி கொடுத்து சோகத்தில் ஆழ்ந்திருந்த திருதராஷ்டிரன் பகவான் கிருஷ்ணரிடம் "கண்ணா, நான் எந்த ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?" என்று கேட்டார். அதற்கு பகவான் "திருதராஷ்டிரரே, 300 பிறவிகளுக்கு முன்னால் நீங்கள் செய்த பாவத்தின் பலனை நீங்கள் இப்போது அனுபவிக்கிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு வேட்டுவர். காட்டில் ஒரு "தாய்ப்பறவையை" வேட்டையாட அம்பெய்தினீர்கள். ஆனால், அந்த தாய்ப்பறவையானது தப்பி எங்கோ பறந்து சென்று விட்டது. அந்த கோபத்தில் அந்த தாய்ப்பறவை அடைகாத்துக்கொண்டிருந்த 100 முட்டைகளை போட்டு உடைத்தீர்கள்.அதை அங்கு மறைவில் அமர்ந்திருந்த தகப்பன் பறவை செய்வதறியாமல் சோகத்தில் உருகியது. அந்த வினைப்பயனை தான் இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள்" என்றார். "அதை நான் என்னுடைய மறு பிறவியிலேயே அனுபவித்திருக்கலாமே? ஏன் 300 பிறப்பு முடிந்து இப்போது வரவேண்டும்?" என்று திருதராஷ்டிரன் வினவ, நீங்கள் நினைப்பது போல் கர்மவினைக் கணக்கு அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் ஒரு குழந்தையை பெறுவதற்கே நிறைய புண்ணி

அன்பின் கதை!

குட்டிக்கதை °°°°°°°°°°°°°°°°°°°°°°°°° *ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.* *பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....* *அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,* *இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....* *அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.* *உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,* *இல்லையேப்பா..,* *நல்லா தானே இருக்கு" என்பார்.* *உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.* இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், ஏங்க.. *"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு"....!!* *"என் தினமும் இப்படி நல்லா இல்லைனு* *சொல்லி டிராமா போடறீங்க"* உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்....., *"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க"....!!* ஆனாலும்..., *"தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க".....!!* நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்....., *" தினம்* *அவர் காச

இறைவன் ஏன் சோதிக்கிறான்?

*இறைவன் நம்மை சோதிப்பது* *இறைவன் நம்மை சோதிப்பது நமது உண்மையான குணத்தை நாம் அறியவே..!!* *குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.* *ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டான்.* *“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்.” என்று கூறினார் குரு.* *மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.* *மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.* *“இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களை கேட்டார் குரு.* *"இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவைதான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்டார்.* *“தெரியவில்லை."* *"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார்.* *அதிலிருந்து தேன் வெளியேவ