Posts

திருமணம் ஆகாமல் உள்ள ஆண் பெண் அனைவரும் திருமணமாக வேண்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திருந்து அரியலூர் வழியிலுள்ள திருமலாப்பாடி வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சென்று பங்குனி மாதம் நடக்கும் நந்தி கல்யாணத்தை பார்க்கும் அனைவருக்கும் முந்தி கல்யாணம் நடக்கும் என்பார்கள் அடுத்த வருடம் நந்தி கல்யாணம் நடப்பதற்க்குள் கல்யாணம் நடக்கும் எண்பது ஜதீகம் அதன்படி வருகிற ஸ்ரீ ப்லவ ஆண்டுl பங்குனி மாதம் 26தி புனர்பூசம் நட்சத்திரம் 09-04-2022 சனிக்கிழமை நந்தி கல்யாணம் நடக்கிறது அதில் அனைவரும் கலந்து கொண்டு நந்தியின் அருள் பெற்று திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏 நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்* என்பது சான்றோர் வாக்கு. நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். ஆம், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த *நந்திகேஸ்வரரின் தெய்வீக திருமணம்* ஒவ்வொரு வருடமும் *பங்குனி மாதம் வரக்கூடிய புனர்பூச நட்சத்திரத்தன்று* இந்த சிறப்பு வாய்ந்த திருமணம
சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்துவர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்? சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன். அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு கிளம்புகிறோம். விஷ்ணு கோயிலில் தரிசித்துவிட்டு வரும்போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக வரவேண்டும்.
கோயிலில் நந்தியின் காதில் வேண்டு கோளைச் சொல்கிறார்களே, சரியா? சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந் திக்கு முன்னால் பக்க வாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. உங்களது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம். அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டு கோளைச் சொல்கிறேன் பேர்வழி என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று. பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவ தால் அந்
எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு?​ கடவுளை வணங்குவதற்கு நாள் நட்சத்திரம் ஏன் பார்க்க வேண்டும்? எனினும் மாணவர்களுக்கு பள்ளியில் கால அட்டவணை இருப்பது போல உங்களது கேள்விக்கு பதிலாக அட்டவணை இதோ:ஞாயிறு - கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்கலாம். திங்கள் - சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல் களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது. செவ்வாய் - சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும். புதன் - பெருமாளை சேவிப்பது நன்மை தரும். துளசிமாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும். வியாழன் - நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான் களை ஆராதனை செய்ய உகந்த நாள் பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நன்மை தரும். வெள்ள
கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பகுதி: சுல்தானின் மனைவி வீர சிவாஜியின் அந்தப்புரத்தில். (ஒரு சுல்தானின் மனைவியை சிறைபிடித்த சிவாஜியின் வீரர்கள்!) சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின. அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு அளித்து விடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர். அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம்
A fortnight back we, some friends in Ernakulam and nearby areas went on a trip to Munnar. We had the privilege to have an exceptionally brilliant driver with unmatched skills. Since I too enjoy long distance drive I enquired about the skills he has developed. He is working with a large transport company. He carries consignment across the country and abroad, to places like Bangladesh, Pakistan, Afganistan etc by road. Whenever bus/truck companies release new models, they give training to drivers of the buyer company. And his company invariably sends him for training. Thus he had opportunities to undergo training at Volvo, Sania, Bharat Benz and a few international brands. He told me the following information he got from one such training. I am sharing it as I feel it is vital. _We have heard of many fatal accidents occurring since the driver dozed while behind the wheels_. The trainer told in the class that it is not so in most of those mishaps. Reasearch has revealed that mo
*இரண்டு* கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு. உதாரணமாக, "தேர் ஓடுவது எதனால்? தெருவை மெழுகுவது எதனால்?" என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில், "அச்சாணியால்" என்பது. தேர் ஓடுவது அச்சாணியால், தெருவை மெழுகுவது அச் - சாணியால் என்று பதிலில் விளக்கம் கிடைக்கும். "நீ வசிக்கும் ஊர் எது? உன் காலில் காயம் வந்தது எப்படி?" என்ற இரு கேள்விகளுக்கான ஒரே பதில் "செங்கல்பட்டு" என்பது. "சாம்பார் மணப்பதேன்? உடல் நலிவதேன்?" என்ற இரு வினாக்களுக்கு ஒரே பதில் "பெருங் காயத்தால்!" என்பது. இன்று *ஆங்கில* வழிக் கல்வி பெருகிவிட்ட காலம். முன்னர் பெரும்பாலானோர் *தமிழ்வழிக் கல்வியில் பயின்றபோது இத்தகைய சொல் விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும், சிந்தனைத் திறனையும் ஒரு சேர வளர்த்தன...* *இடைக்காலத்தில்* வாழ்ந்த இளஞ்சூரியன், முதுசூரியன் என்ற இரட்டைப் புலவர்களில் ஒருவர் கண்பார்வையற்றவர், ஒருவர் கால் ஊனமானவர். கால் ஊனமானவரைக் கண்பார்வையற்றவர் தோளில் சுமந்து செல்வார். கால் ஊனமானவர் தோளில் இருந்தவாறே எ