*ஸ்ரீராமஜெயம்* *ருத்ராய_நமஹ* 🙏....... சென்னைக்கு அருகே உள்ள பூவிருந்தவல்லியில் அவதரித்த மகான் திருக்கச்சி நம்பிகள். அவர் காஞ்சி வரதராஜப் பெருமாளுடன் நேரே பேசும் பாக்கியம் பெற்றிருந்தார். ஒருமுறை அவர் வரதராஜப் பெருமாளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தார். அப்போது தலைமேல் ஒரு பாத்திரத்தோடு அங்கே வந்த அர்ச்சகர் திருக்கச்சி நம்பிகளிடம், “பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். இதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மடப்பள்ளிக்குச் சென்று புளியோதரையையும் எடுத்து வந்து விடுகிறேன்!” என்று சொல்லி விட்டு மடப்பள்ளியை நோக்கிச் சென்றார். அப்போது பெருமாள் திருக்கச்சி நம்பிகளிடம், “நம்பி! கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலை எடுத்து எனக்கு ஊட்டி விடுங்கள்!” என்றார். பெருமாளின் கட்டளையைச் சிரமேற்கொண்ட நம்பி, பாத்திரத்திலிருந்து சர்க்கரைப் பொங்கலை எடுத்துப் பெருமாளுக்கு ஊட்டினார். பெருமாளும் அமுது செய்தார். “ஆஹா! நன்றாக இருக்கிறதே! இன்னும் கொஞ்சம் தாருங்கள்!” என்று கேட்டார் பெருமாள். நம்பியும் எடுத்து ஊட்டினார். அதற்குள் புளியோதரையுடன் அங்கே வந்த அர்ச்சகர், பாத்திரத்
Posts
- Get link
- X
- Other Apps
*நேற்று அவுரங்காபாத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.* *காரின் டயர் வெடித்ததே காரணம்.* *முக்கியமான செய்தி புதிதாக கட்டப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் டயர் வெடிக்கும் சம்பவங்கள் இந்த நாட்களில் அதிகம். இதில் தினமும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.* *நாட்டின் அதி நவீன சாலைகளில் ஏன் அதிக விபத்துகள் நடக்கின்றன என்ற கேள்வி ஒரு நாள் என் மனதில் எழுந்தது.* *பெரிய விபத்துக்களுக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டது. அது டயர் வெடிப்பதால் மட்டுமே.* *எல்லாருடைய டயர்களும் ஒரே மாதிரி வெடித்து சிதறும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் அப்படி என்ன வகையான கூர்முனைகளை சாலையில் வைத்திருப்பார்கள் என்று யோசித்தேன்.* *மனம் புயலடித்து விட்டதால், இன்றே இந்த விஷயத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.* *எனவே அதை* *கண்டு பிடிக்க* *நண்பர் குழுவை* *ஏற்படுத்தினோம்.* *நாங்கள் ஒரு ஸ்கார்பியோ எஸ்யூவியில் ஏறினோம்.* *பயணத்தின் ஆரம்ப நிலையில் காரின் டயரின் அழுத்தத்தை சரிபார்த்து, 25 PSI என்ற சர்வதேச தரத்தின்படி வைத்தோம்.* *(அனைத்து வளர்ந்த நாடுகளின் கார்களிலும் மேற் சொன்ன
- Get link
- X
- Other Apps
காசியை மிஞ்சும் ஒரு கோவில் தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா ? இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது. அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள். புதுச்சேரி அருகில் திருகாஞ்சி என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம். காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. இந்த கோவில் சங்கராபரணி நதிகரியல் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே நாம் சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு ஒப்பானது என்று அறிந்துகொள்ளலாம் . www.agathiyarjanachithar.
- Get link
- X
- Other Apps
*பக்தி உண்மை என்றால், எதுவும் சாத்தியமே..!* ஒரு ஊரில் யாருமில்லாத ஒரு ஏழைப் பெண் இருந்தாள். அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள். ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார். “மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.” “என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “சிவ சிவ’ன்னு ச
- Get link
- X
- Other Apps
அஷ்டமி, நவமி என்றால் என்ன? - ஒரு நண்பரின் அருமையான பதிவு சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டு மனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவு படுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்து விட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார். நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார். நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவ
- Get link
- X
- Other Apps
🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿 எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு *தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு* வேகமாக ஓடினார்கள்.. பந்தயம் கடினமாக இருந்த போது வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கிவைத்து ஓடினார்கள்.. பின்னர் தர்மசிந்தனைகள், கடமை, கண்ணியம் கூட சுமைகளாகிப் போயின.. எனவே *அவை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு* ஓட்டத்தைத் தொடர்ந்தனர்.. *உறவுகள் சுமையாக தொந்தரவாக* அவர்களுக்குத் தோன்றின.. எனவே *அவற்றையும் விட்டுத் தள்ளினார்கள் அல்லது வில(க்)கி ஓடினார்கள்..* இந்த நவீன மனிதர்களுக்குப் *பொருளாதார வசதி புகழ் வெற்றிகரமான வாழ்க்கை* என்ற அடங்காத வெறி மட்டுமே எஞ்சி உள்ளதால் பந்தயத்தில் வேக வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.. இனி அவர்கள் வீசி எறிய எதுவுமில்லை!.. *குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன...* மடிக்கணினித் திரை வழியாக பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள்!... *குழந்தையின் பசிக்கு பாலூட்டவும் குளிப்பாட்டவும் நேரம் இல்லாத* இளம் அம்மா
- Get link
- X
- Other Apps
*கந்த சஷ்டி* முருகப் பெருமானை போற்றி பாடப்படும் பாடல்களில் முதன்மையானது கந்தசஷ்டி கவசம். முருகப் பெருமானை தெரிந்த அனைவருக்கும் கந்தசஷ்டி கவசம் பற்றி தெரியும். 270 வரிகளை கொண்ட கந்த சஷ்டி கவச பாடல் பலருக்கும் மனப்பாடமாக தெரியும். சிலருக்கு முழுவதுமாக தெரியாவிட்டாலும், காக்க காக்க கனகவேல் காக்க...நோக்க நோக்க நொடியினில் நோக்க...தாக்க தாக்க தடையற தாக்க...பார்க்க பார்க்க பாவம் பொடிபட என்ற வரிகள் நிச்சயம் தெரிந்திருக்கும். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீ